புக்கிட் தீமா காட்டுப் பகுதியில் கான்கிரீட் விழுந்து மாது மரணம்

புக்கிட் தீமா காட்டுப் பகுதியில் கான்கிரீட் விழுந்து மாது மரணம்

1 mins read
2a356be6-065c-4399-a26f-5961cb853fd3
மாது மீது கான்கிரீட் விழுந்ததாக நம்பப்படுகிறது. படம்: சாவ்பாவ் -

பேச்சு மூச்­சின்றி 48 வயது மாது ஒரு­வர், ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று அப்­பர் புக்­கிட் தீமா சாலை­யோ­ர­மாக உள்ள காட்­டுப் பகு­தி­யில் கிடந்­தார் என்று காவ­லர்­கள் தெரி­வித்­த­னர்.

மாது மீது கான்­கி­ரீட் பகுதி ஒன்று விழுந்­த­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­தது.

இயற்­கைக்கு மாறான மர­ணம் ஒன்­றைப் பற்­றிய தக­வல் காவ­லர்­க­ளுக்கு ஞாயிறு அன்று பகல் 12.40 மணி­ய­ள­வில் கிடைத்­தது.

உணர்­வற்ற நிலை­யில் இங் டெங் ஃபோங் மருத்­து­வ­ம­னைக்கு மாது கொண்டு செல்­லப்­பட்­டார். பின்­னர் அவர் உயி­ரி­ழந்­து­விட்­டதை காவ­லர்­கள் உறு­திப்­ப­டுத்­தி­னர்.

மர­ண­ம­டைந்­த­வர் நான்கு பிள்­ளை­க­ளுக்­குத் தாயான திரு­வாட்டி மெலிட்டா டோலா என்று நம்­பப்­படு­கிறது.

திரு­வாட்டி மெலிட்டா மலை­ ஏ­று­வ­தில் அதிக ஆர்­வம் உள்­ள­வர்.

'மெண்­டோசா கம்­போங்' என்ற கைவி­டப்­பட்ட கிரா­மம் ஒன்­றைத் தேடி பல­ரும் இந்­தக் காட்­டுப் பகு­திக்­குள் செல்­வ­தா­கக் கூறப்­படு­கிறது.

இங்கு செல்­ப­வர்­க­ளால் இடிந்து­போன சுவர்­க­ளைக் காண முடி­யும் என்று கூறப்­ப­டு­கிறது.

இருப்­பி­னும் இவ்­வி­டம் மேடும் பள்­ள­மு­மாக இருப்­ப­தால் மலை­ ஏ­று­வ­தில் அதிக அனு­ப­வம் இல்­லா­த­வர்­கள் கவ­ன­மாக இருக்க வேண்­டும் என்று இயற்கை ஆர்­வலர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

மாது மர­ணம் குறித்து விசா­ரணை நடந்து வரு­கிறது.