சிறிய கார்களுக்கான 'சிஓஇ' கட்டணம் ஏற்றம்: 6 ஆண்டுகளில் புதிய உச்சம்

சிறிய கார்களுக்கான 'சிஓஇ' கட்டணம் ஏற்றம்: 6 ஆண்டுகளில் புதிய உச்சம்

1 mins read
cad54515-d1db-4c55-8548-7df0ac51e2f7
-

வாகன உரி­மைச் சான்­றி­தழ் (சிஓஇ) கட்­ட­ணங்­க­ளுக்­கான ஏலம் நேற்று முடி­வ­டைந்­த­தில் ஆறு ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு சிறிய கார்­க­ளுக்­கான கட்­ட­ணம் $58,801க்கு உயர்ந்­தி­ருந்­தது.

இரண்டு வாரங்­க­ளுக்கு முன் நடந்த ஏலத்­தில் முடி­வான சிறிய கார்­க­ளுக்­கான கட்­ட­ணத்தை, நேற்­றைய ஏலம் $1,791 வித்­தி­யா­சத்­தில் முறி­ய­டித்­தது.

பெரிய கார்­க­ளுக்­கான சிஓஇ கட்­ட­ணம் $80,989க்கு உயர்ந்­தது. கடந்த மூன்று மாதங்­க­ளாக இப்­பி­ரி­வில் ஏற்­றமே பதி­வாகி வரு­கிறது. மோட்­டார் சைக்­கிள்­க­ளுக்­கான கட்­ட­ண­மும் 2.1% அதி­க­ரித்து $9,401ஆகப் பதி­வா­னது.

இதற்­கி­டையே, வர்த்­தக வாக­னங்­கள் மற்­றும் பேருந்­து­க­ளுக்­கான சிஓஇ கட்­ட­ணங்­கள் இறக்­கம் கண்­டன. $45,000லிருந்து நேற்­றைய ஏலத்­தில் இப்­பி­ரி­வுக்­கான கட்­டணம் $44,000க்குக் குறைந்­தது.

பொதுப் பிரிவு வாக­னங்­க­ளுக்­கான கட்­ட­ணம் $83,889க்குக் குறைந்­தது.

ஏலத்­திற்கு விடப்­பட்ட சிஓ­இக்­களின் எண்­ணிக்கை 1,822 என்­றா­லும் மொத்­தம் 2,522 ஏலங்­கள் கிடைத்­தி­ருந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

இதற்­கி­டையே வாகன விநி­யோகத்தை அதன் தேவை தொடர்ந்து விஞ்சி இருக்­கும் என்று வாகன நிறு­வ­னங்­கள் கூறின.

இந்­நி­லை­யில், அடுத்த ஆண்டு ஐந்து வாக­னப் பிரி­வு­க­ளி­லும் சிஓஇ கட்­ட­ணங்­கள் ஏறு­மு­க­மாக இருக்­கும் என்று நிறு­வ­னங்­கள் தங்­கள் எதிர்­பார்ப்­பைத் தெரி­வித்­துள்­ளன.