இரண்டு அதிரடிச் சோதனைகள்: விசாரணையில் 19 பேர்

இரண்டு அதிரடிச் சோதனைகள்: விசாரணையில் 19 பேர்

1 mins read
edf4361c-7022-44c5-b237-01e34eaa14ab
-

சட்­ட­வி­ரோத சூதாட்ட நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டது, சட்­ட­வி­ரோ­த­மாக வேலைக்கு ஆள் வைத்­தது ஆகி­யவை தொடர்­பில் 19 பேர் சந்­தேகத்­தின் பேரில் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர். காவ­லர்­கள் இம்­மா­தம் நடத்­திய இரண்டு அதி­ரடிச் சோதனை நட­வ­டிக்­கை­களில் இவர்­கள் சிக்­கி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

முதல் சோதனை நட­வ­டிக்­கை­யின்­போது பந்­த­யப்­பி­டிப்பை நடத்­தி­ய­தாக 77, 78 வய­து­க­ளு­டைய இரு ஆட­வர்­களும் அவர்­க­ளி­டம் பந்­த­யம் கட்­டி­ய­தாக 56 வய­துக்­கும் 88 வய­துக்­கும் இடைப்­பட்ட நான்கு ஆட­வர்­களும் கண்­ட­றி­யப்­பட்­ட­னர்.

இரண்­டா­வது சோதனை நட­வடிக்­கையை மத்­திய போதைப்­பொருள் ஒழிப்­புப் பிரி­வு­டன் காவ­லர்­கள் இணைந்து நடத்­தி­னர்.

லோயாங் வட்­டா­ரத்­தில் அமைந்த வீடு ஒன்­றில் 21 பேர் கலந்­து­ற­வாடு­வதை அதி­கா­ரி­கள் கண்­டு­பி­டித்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

சூதாட்­டத்­திற்­கான பொருள்­கள் அங்கு கைப்­பற்­றப்­பட்­ட­து­டன் குறிப்­பிட்ட ஒரு கட்­ட­ணத்­திற்­குத் துணை­யாக இருக்க பெண் ஒரு­வ­ரும் இருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

படம்: சிங்­கப்­பூர் காவல் படை