கெடு முடிவதற்குள் 'விடிஎல்' பயணச்சீட்டு வாங்க மணிக்கணக்கில் காத்திருப்பு

கெடு முடிவதற்குள் 'விடிஎல்' பயணச்சீட்டு வாங்க மணிக்கணக்கில் காத்திருப்பு

1 mins read
fad74db7-9e4f-428a-b684-09fe634e8aeb
ஐயோன் ஆர்ச்சர்ட் கடைத்தொகுதியில் அமைந்துள்ள எஸ்ஐஏ சேவை நிலையம் முன்பு நீண்டிருந்த வரிசை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தடுப்­பூசி போட்­டோ­ருக்­கான பய­ணப் பாதை (விடி­எல்) மூலம் சிங்­கப்­பூ­ருக்கு வரு­வ­தற்­கான புதிய விமா­னப் பய­ணச்­சீட்டு விற்­பனை நேற்று (டிசம்­பர் 23) முதல் ஜன­வரி 20 வரை நிறுத்­தி­வைக்­கப்­படும் என்ற அறி­விப்பு வெளி­யா­னது முதல் ஆர்ச்­சர்ட் ரோட்­டில் உள்ள சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் (எஸ்­ஐஏ) சேவை நிலை­யம் முன்பு ஏரா­ள­மா­னோர் குவி­யத் தொடங்­கி­னர். அத­னைத் தொடர்ந்து அங்கு நீண்ட வரி­சை­கள் காணப்­பட்­டன.

ஐயோன் ஆர்ச்­சர்ட் கடைத்­தொ­கு­தி ­யில் அமைந்­துள்ள அந்த சேவை நிலை­யத்­தின் முன்­னால் மணிக்­க­ணக்­கில் காத்­தி­ருந்­த­தாக 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்­தித்­தா­ளி­டம் பேசி­ய­வர்­கள் கூறி­னர்.

சிங்­கப்­பூர் ஏர்­லைன்­ஸின் நேர­டித் தொலை­பேசி எண்­ணில் தொடர்­பு­கொள்­வது சிர­ம­மாக இருந்­த­தால் அதன் சேவை நிலை­யத்­துக்கு நேர­டி­யாக வந்­த­தா­கச் சிலர் தெரி­வித்­த­னர்.

இரவு 11.59 மணி காலக்­கெ­டு­வுக்­குள் விடி­எல் பய­ணச்­சீட்­டு­களை வாங்­க­வும் வாங்­கிய பய­ணச்­சீட்­டு­களில் மாற்­றம் செய்­ய­வும் அங்கு வந்­தி­ருந்­தோ­ரில் பெரும்­பா­லா­னோர் கூறி­னர்.

அமெ­ரிக்கா சென்று அங்­கி­ருந்து அடுத்த ஆண்டு சிங்­கப்­பூ­ருக்­குத் திரும்பி வர பய­ணச்­சீட்டு தொடர்­பான சில எளிய சந்­தே­கங்­க­ளுக்கு விடை­காண சுமார் ஆறு மணி நேரம் சேவை நிலை­யம் முன் காத்­தி­ருந்­த­தாக எல்­விஸ் சுவா, 23, என்­னும் மாண­வர் தெரி­வித்­தார்.

கால்­க­டுக்­கக் காத்­தி­ருந்­த­போ­தி­லும் சேவை ஊழி­யர் தன்­மை­யாக நடந்­து­கொண்­ட­தற்கு அவர் நன்றி தெரி­வித்­தார்.

மற்­றொ­ரு­வ­ரான திரு ரஹ்­மான் பிற்­ப­கல் 1 மணி முதல் நான்கு மணி நேரம் எஸ்­ஐஏ சேவை நிலை­யம் முன்­னால் காத்­தி­ருந்­த­தா­கச் சொன்­னார்.