இந்தியாவிலிருந்து இங்கு படிக்க வந்த ஜஸ்பிரீத் சிங், 26, என்பவர் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டார். கனடாவைக் குறிவைத்து கள்ளப்பணத்தை நல்ல பணமாக மாற்றும் வெளி நாட்டுக் கும்பலுடன் சேர்ந்து அவர் செயல்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் குற்றத்திற்காக நேற்று அந்த ஆடவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. உரிமம் பெறாத பணம் வழங்கும் சேவைக்குத் துணைபுரிந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்
சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.

