கடந்த ஆண்டு தொடக்கத்தில் புதுப்பிப்புப் பணிகளுக்காக மூடப்பட்ட 'i12 காத்தோங்' கடைத்
தொகுதி நேற்று (டிசம்பர் 23) முதல் கட்டம் கட்டமாகத் திறக்கப்படும் என அதனை நடத்தும் கெப்பல் லேண்ட் தெரிவித்து உள்ளது.
ஈஸ்ட் கோஸ்ட் ரோடு மற்றும் ஜூ சியாட் ரோடு ஆகியவற்றின் சாலைச் சந்திப்பில் இடம்பெற்றுள்ள இந்தக் கடைத்தொகுதி ஆறு தளங்களைக் கொண்டிருக்கும்.
சில்லறை வர்த்தகம் முதல் வாழ்க்கைப்பாணி கடைகள் வரை அவற்றில் இடம்பெற்றிருக்கும். கார் நிறுத்தத்திற்காக இரண்டு கீழ்த்தளங்கள் ஒதுக்கப்படும்.
இந்தக் கடைத்தொகுதியில் உள்ள 180 கடைகளும் கட்டம் கட்டமாகத் திறக்கப்படும். இறுதி யாக 2022 மார்ச் மாதம் முழுமையாகத் திறக்கப்பட்டு விடும்.
கோல்ட் ஸ்டோரேஜ் நடத்தும் சிஎஸ் ஃபிரஷ், கோல்டன் வில்லேஜ் மற்றும் யுனைடெட் வோர்ல்ட் பாலர் பள்ளி போன்றவை புதுப்பிக்கப்பட்ட கடைத்தொகுதியில் மீண்டும் இடம்பெறும். நீடித்த நிலைத்தன்மை என்பது இந்தக் கடைத்தொகுதியின் முக்கிய அம்சம்.
எரிசக்தியையும் தண்ணீரையும் சேமிக்கும் கருவிகள் இங்கு பொருத்தப்பட்டிருக்கும். கார் நிறுத்துமிடத்தில் மின்சார வாகனங்களுக்கு மின்னேற்றும் வசதி யும் செய்யப்படும்.
கடைத்தொகுதியில் தேங்கும் உணவுக் கழிவுகளைக் குறைக்கும் நோக்கில் அதற்கான சாதனம் அமைக்கப்படும்.
உரமாகவோ திரவக் கழிவாகவோ உணவுக்கழிவுகளை மாற்றும் திறனை அந்தச் சாதனம் பெற்றிருக்கும்.
பயன்படுத்திய பின்னர் வீசப்படும் மின்சாரப் பொருள்கள், கண்ணாடிப் பொருள்கள், உலோகப் பொருள், காகிதம் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களைச் சேகரித்து மறுசுழற்சி செய்வதற்கான வசதியும் புதுப்பொலிவு பெற்று வரும் கடைத்தொகுதியில் ஏற்
படுத்தப்படும் என்று கெப்பல் லேண்ட் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

