ஜோகூர் பயணச்சீட்டுகள் மின்னல்வேகத்தில் தீர்ந்தன

ஜோகூர் பயணச்சீட்டுகள் மின்னல்வேகத்தில் தீர்ந்தன

2 mins read
c3aa062d-41f7-4c11-a914-28d88b5bb5fb
-

'விடி­எல்' பய­ணச்­சீட்டு விற்­பனை நிறுத்­தப்­படும் என்ற அறி­விப்­பைத் தொடர்ந்து சிங்­கப்­பூ­ருக்­கும் ஜோகூர் பாரு­வுக்­கும் இடை­யி­லான ஜன­வரி இறு­தி­வார பேருந்­துப்

பய­ணச்­சீட்­டு­கள் அனைத்­தும் வேக மாக விற்­றுத் தீர்ந்­து­விட்­ட­தாக பேருந்து நிறு­வ­னம் ஒன்று தெரி­வித்துள்­ளது. சீனப் புத்­தாண்­டை­யொட்டி சொந்த ஊருக்­குத் திரும்ப மலே­சி­யர்­கள் முந்­திக்­கொண்டு பய­ணச்­சீட்டு வாங்க முயன்­ற­தாக அது கூறி­யது.

ஓமிக்­ரான் தொற்­றைக் கட்­டுப்­

ப­டுத்­தும் நோக்­கில் டிசம்­பர் 22 முதல் ஜன­வரி 20 வரை சுமார் ஒரு மாத காலத்­திற்கு விடி­எல் எனப்­படும் தடுப்­பூசி போட்­டோ­ருக்­கான பய­ணப் பாதைத் திட்ட பய­ணச்­சீட்டு விற்­பனை நிறுத்திவைக்­கப்­படும் என்று நேற்று முன்­தி­னம் சிங்­கப்­பூர் அர­சாங்­கம் அறி­வித்­தது.

பிப்­ர­வரி 1ஆம் தேதி சீனப் புத்­தாண்டு கொண்­டாட்­டம் தொடங்­கு­வ­தற்கு 10 நாள் முன்பு வரை பய­ணச்­சீட்டு விற்­பனை நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ள­தால் தடைக்­குப் பிறகு அதா­வது ஜன­வரி 21லிருந்து மலே­சியா செல்­லப் பல­ரும் படை­யெ­டுத்­த­னர்.

அர­சாங்க அறி­விப்பு வெளி­யான பின்­னர் சிங்­கப்­பூர்-ஜோகூர் பாரு பேருந்­துப் பய­ணச்­சீட்டு விற்­பனை சூடு­பி­டிக்­கத் தொடங்­கி­ய­தா­க­வும் ஜன­வரி 21க்கும் ஜன­வரி 31க்கும் இடைப்­பட்ட நாள்­க­ளுக்­கான பய­ணச்­சீட்­டு­கள் அனைத்­தும் ஒரு மணி­நே­ரத்­தில் விற்­றுத் தீர்ந்­த­தா­க­வும் 'காஸ்வே லிங்க்' பேருந்து நிறு­ வ­னம் தெரி­வித்­தது.

இருப்­பி­னும், இதே நாள்­களில் ஜோகூர் பாரு­வி­லி­ருந்து சிங்­கப்­பூர் வரு­வ­தற்­கான பய­ணச்­சீட்­டு­கள் தொடர்ந்து விநி­யோ­கிக்­கப்­பட்டு வரு­வ­தாக இந்­நி­று­வ­னத்­தின் பேச்­சா­ளர் 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்­தித்­தா­ளி­டம் கூறி­னார்.

பய­ணச்­சீட்டு விற்­பனை நிறுத்­தப்­படும் என்ற அறி­விப்­புக்கு முன்­னரே ஜோகூர் பாரு­வுக்­கான விற்­பனை நடந்­து­கொண்டு இருந்­த­தா­க­வும் அறி­விப்பு வெளி­யான பின்­னர் பய­ணச்­சீட்டு முன்­ப­தி­வு­களும் பயண விசா­ர­ணை­களும் ஏரா­ள­மாக அதி­க­ரித்­ததாக அவர் சொன்­னார்.

இதற்­கி­டையே, கூட்­டத்­தைக் கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கில் தின­மும் ஒவ்­வொரு பய­ணத் தேதி என்ற அடிப்படையில் கட்டம் கட்டமாக பய­ணச்­சீட்டை விற்­றுவருவதாக மற்­றொரு பேருந்து நிறு­வ­ன­மான 'டிரான்ஸ்­டார் டிரா­வல்' தெரி­வித்­தது. அதன்­படி, ஜன­வரி 21ஆம் தேதி க்கான பய­ணச்­சீட்டு விற்­பனை புதன்­கி­ழமை நடை­பெற்­றது.

அன்­றைய தேதிக்­கான சிங்­கப்­பூர்-ஜோகூர் பாரு பய­ணச்­சீட்டு விற்­பனை காலை 8 மணிக்­குத் தொடங்­கி­ய­தா­க­வும் ஒரு மணி

­நே­ரத்­தில் அனைத்­தும் விற்­றுத் தீர்ந்­து­விட்­ட­தா­க­வும் அந்­நி­று­வ­னத்­தின் பேச்­சா­ளர் கூறி­னார்.

விடி­எல் பய­ணச்­சீட்டு விற்­பனை ஜன­வரி 20 வரை நிறுத்­தி­வைக்­கப்­படும் அதே­நே­ரத்­தில் ஜன­வரி 21க்குப் பிறகு பேருந்­துப் பய­ணச்­சீட்­டு­க­ளின் எண்­ணிக்கை பாதி­யா­கக் குறைக்­கப்­படும் என்­றும் நேற்று முன்­தி­னம் அறி­விக்­கப்­பட்டு இருந்­தது. அதற்­கி­ணங்­க, தற்­போது 100ஆக இருக்­கும் பேருந்­து­க­ளின் எண்­ணிக்கை 48 ஆகக் குறை­யும்.

அதா­வது ஒவ்­வொரு மார்க்­கத்­தி­லும் தலா 24 பேருந்­து­கள் இயக்­கப்­படும் என்று வர்த்­தக தொழில் அமைச்சு புதன்­கி­ழமை தெரி­வித்­தி­ருந்­தது.