சிங்கப்பூரில் திங்கட்கிழமை (டிசம்பர் 20) வரை பதிவான 65 ஓமிக்ரான் சம்பவங்களில 53 விடிஎல் பயணம் மூலம் இங்கு வந்தோரிடம் உறுதிசெய்யப்பட்டவை என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. இந்த 53 பேரில் 41 பேரிடம் ஓமிக்ரான் தொற்று இருப்பது சிங்கப்பூர் வந்திறங்கியதும் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
எஞ்சிய 12 பேருக்கு விடிஎல் பயணத்திட்டத்திற்கான மேம்
படுத்தப்பட்ட பரிசோதனை நடைமுறையில் தொற்று கண்டறியப்பட்டதாக அமைச்சு நேற்று கூறியது.
இதுவரை பதிவாகியுள்ள ஓமிக்ரான் சம்பவங்களில் 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவை நாடு திரும்பிய சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் மற்றும் நீண்டகால அனுமதியில் வசிப்போரிடம் உறுதி செய்யப்பட்டவை என்று 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தியாளரிடம் சுகாதார அமைச்சு கூறியது.
இருப்பினும் இவர்கள் எந்தெந்த நாடுகளிலிருந்து சிங்கப்பூர் திரும்பியவர்கள் என்ற விவரத்தை அது வெளியிடவில்லை.
ஓமிக்ரான் பரவலைக் கட்டுப் படுத்த, விடிஎல் திட்டப் பயணத்துக்கான விமான, பேருந்து பயணச்சீட்டுகளின் விற்பனையை கிட்டத்தட்ட ஒரு மாத காலத்துக்கு நிறுத்திவைப்பதாக சுகாதார அமைச்சு புதன்கிழமை கூறியது.
அதேநேரம் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது முதல் வெளிநாடுகளிலிருந்து வருவோரில் அதிகமானோரிடம் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. புதன்கிழமை அந்த எண்ணிக்கை 76 என உச்சத்தைத் தொட்டது.
சமூக அளவில் ஓமிக்ரான் தொற்று பரவுவதைத் தடுக்க நட
வடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு
வதாகத் தெரிவித்த அமைச்சு, தொடர்புத் தடம் அறியும் முறை மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்கள் சுற்றிவளைக்கப்பட்டு வரு வதாகக் குறிப்பிட்டது.
ஓமிக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களுடனும் சந்தேகத்திற்கு உட்பட்டவர்களுடனும் தொடர்பிலிருந்த அனைவரும் தனித்துவ தங்குமிடங்களில் பத்து நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் அது கூறியது.
வெளிநாடுகளில் இருந்து 'விடிஎல்' பயணத்திட்டத்தின்கீழ் சிங்கப்பூருக்கு வரும் அனை
வரும் கொவிட்-19 பரிசோதனை நடைமுறைகளை முறையாகப் பின்பற்றவேண்டும் என அமைச்சு கூறியுள்ளது.
அவ்வாறு செய்யத் தவறுபவர்கள் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்
களுக்கு இல்லத்தனிமை உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்றும் அது எச்சரித்துள்ளது.
திங்கட்கிழமை நிலவரப்படி 65 ஓமிக்ரான் சம்பவங்களில் 12 உள்ளூர் தொற்று

