ஓமிக்ரான் தொற்றுக் குழுமம் உருவானதாக சந்தேகம்: உடலுறுதி நிலையத்தை 10 நாள்களுக்கு மூட உத்தரவு

ஓமிக்ரான் தொற்றுக் குழுமம் உருவானதாக சந்தேகம்: உடலுறுதி நிலையத்தை 10 நாள்களுக்கு மூட உத்தரவு

1 mins read
82fbfe6d-a3d3-457f-831a-3ba4c36f0b04
'எனிடைம் ஃபிட்னஸ்' உடலுறுதி நிலையத்தில் நடத்தப்பட்ட கிருமிநீக்க சுத்திகரிப்புப் பணி. படம்: சாவ்பாவ் -

அண்­மை­யில் ஓமிக்­ரான் குழு­மம் என்ற சந்­தே­கத்­திற்­குட்­பட்ட 'எனி­டைம் ஃபிட்னஸ்' உட­லு­றுதி நிலை­யத்தை 10 நாட்­க­ளுக்கு மூட உத்­த­ர­வி­டப்­பட்டு உள்­ளது.

புக்­கிட் தீமா கடைத்­தொ­கு­தி­யில் அமைந்­துள்ள அந்த நிலை­யம், தனது வாடிக்­கை­யா­ளர்­கள் பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­க­ளைப் பின்­பற்­று­கி­றார்­களா எனக் கவ­னிக்­கத் தவ­றி­ய­தற்­காக 'ஸ்போர்ட் சிங்­கப்­பூர்' (ஸ்போர்ட்­எஸ்ஜி) அமைப்பு மூடல் உத்­த­ரவை வெளி­யிட்­டுள்­ளது. இத­னைத் தொடர்ந்து, புதன்­கி­ழமை (நேற்று முன்­தி­னம்) முதல் பத்து நாள்க­ளுக்கு அந்த நிலை­யம் மூடப்­பட்டு இருக்­கும்.

சமூ­கத்­தைப் பாது­காப்­பாக வைத்­தி­ருக்க நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டுள்ள பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­களை சிங்­கப்­பூ­ரில் உள்ள அனைத்து விளை­யாட்டு நிலை­யங்­களும் உட­லு­றுதி நிலை­யங்­களும் இவற்­றுக்­குச் செல்­லும் வாடிக்­கை­யா­ளர்­களும் கடைப்­பி­டிப்­ப­தும் விழிப்­ பு­டன் நடந்­து­கொள்வ­தும் அவ­சி­யம் என்று 'ஸ்போர்ட்­எஸ்ஜி' நேற்று தனது அறிக்­கை­யில் கூறி­யது.

மேலும், விதி­மு­றை­க­ளைக் கடைப்­பி­டிக்­காத நிறு­வ­னங்­கள் மற்­றும் தனி­ந­பர்­க­ளுக்கு எதி­ராக அம­லாக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றும் அது எச்­ச­ரித்­துள்­ளது.

விளை­யாட்டு, உட­லு­றுதி நிலை­யங்­கள் தங்­க­ளது நட­வ­டிக்­கை­களை பொறுப்­பு­ணர்­வு­ட­னும் பாது­காப்­பா­க­வும் மீண்­டும் தொட­ரு­வ­தற்­காக அந்­தத் துறை­யி­ன­ரு­டன் தான் அணுக்­க­மா­கப் பணி­யாற்­றப்­போ­வ­தா­க­வும் 'ஸ்போர்ட்­எஸ்ஜி' குறிப்­பிட்­டது.

'எனி­டைம் ஃபிட்னஸ்' உட­லு­றுதி நிலை­யத்­து­டன் தொடர்­பு­டைய இரு­வ­ருக்கு ஓமிக்­ரான் தொற்று இருப்­ப­தாக முதற்­கட்­டப் பரி­சோ­த­னை­யில் தெரிய வந்­தது என கடந்த செவ்­வாய்க்­கி­ழமை சுகா­தார அமைச்சு தெரி­வித்து இருந்­தது.

மூன்­றா­வது நப­ரின் பரி­சோ­தனை முடி­வு­கள் இன்­னும் வெளி­வ­ர­வில்லை.