76 பேருக்கு உறுதி: உச்சத்தைத் தொட்ட வெளிநாட்டு தொற்று

76 பேருக்கு உறுதி: உச்சத்தைத் தொட்ட வெளிநாட்டு தொற்று

1 mins read
4b6cdeb9-7f72-4721-b989-305a0372f9ad
-

சிங்­கப்­பூ­ரில் புதன்­கி­ழமை 335 பேருக்கு புதி­தாக கொவிட்-19 தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. ஒரு­வர் மர­ண­ம­டைந்­தார்.

இத­னைத் தொடர்ந்து, கொரோனா கிரு­மித்­தொற்­று­டன் தொடர்­பு­டைய உடல்­ந­லப் பிரச்­சி­னை­கள் கார­ண­மாக இங்கு மாண்­டோர் எண்­ணிக்கை 818ஐ தொட்­டது. குறிப்­பாக, இந்த மாதத்­தில் மட்­டும் 95 பேர் உயி­ரி­ழந்­து விட்டனர்.

புதிய தொற்­றுச் சம்­ப­வங்­கள் செவ்­வாய்க்­கி­ழ­மையைவிட அதி­கம் பதி­வா­யின. 280 பேருக்கு செவ்­வாய்க்­கி­ழமை தொற்று உறு­தி­செய்­யப்­பட்­டது.

புதி­தா­கப் பாதிக்­கப்­பட்ட 335 பேரில் 259 பேர் உள்­ளூ­ரில் தொற்­றுக்கு ஆளா­ன­வர்­கள். அவர்­களில் 245 பேர் சமூக அள­வி­லும் 14 பேர் வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­மி­டத்­தி­லும் பாதிக்­கப்­பட்­ட­தாக சுகா­தார அமைச்­சின் இணை­யத்­த­ளத்­தில் வெளி­யி­டப்­பட்ட தொற்று தொடர்­பான புள்­ளி­வி­வ­ரம் தெரி­விக்­கிறது.

மேலும், புதன்­கி­ழமை தொற்று உறு­தி­செய்­யப்­பட்­டோ­ரில் 76 பேர் வெளி­நா­டு­களில் இருந்து வந்­த­வர்­கள்.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கொள்­ளை­நோய் பர­வத் தொடங்­கி­யது முதல் இதுவே ஆக அதி­க­மான வெளி­நாட்­டுப் பய­ணி­கள் தொற்று எண்­ணிக்கை.

இதற்கு முன்­னர் இம்­மா­தம் 19ஆம் தேதி பதி­வான 67 வெளி­நாட்­டுப் பய­ணி­கள் தொற்­றுச் சம்­ப­வங்­களே ஆக அதி­க­மா­ன­தாக இருந்­து­வந்­தது.

அன்­றா­டத் தொற்று எண்­ணிக்கை புதன்­கி­ழமை வரை தொடர்ந்து 20 நாள்­க­ளாக 1,000க்கும் குறை­வாக பதி­வாகி வந்­துள்­ளது.