$100 சிடிசி பற்றுச்சீட்டை பயன்படுத்த புதிய இணையத்தளத்தில் எளியமுறையில் விவரம்

சிங்­கப்­பூர் குடும்­பங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள சிடிசி பற்­றுச்­சீட்­டில் உள்ள 100 வெள்­ளி­யை செலவுசெய்ய விரும்­பு­வோர் அவற்றை எங்­கெல்­லாம் பயன்­ப­டுத்­த­லாம் என்­பது பற்­றிய விவ­ரங்­களை புதிய இணை­யத்­த­ளம் தெரிவிக்கும்.

https://www.gowhere.gov.sg/cdcvouchersmerchants என்­னும் இணை­யத்­த­ளம் தமிழ் உள்­ளிட்ட நான்கு மொழி­களில் விவ­ரங்­களை அளிக்­கிறது. குடி­யி­ருப்­பா­ளர்­கள் தங்­க­ளது வீட்­டின் அஞ்­சல் குறி­யீடு அல்­லது முக­வ­ரியை இந்த இணை­யத்­த­ளத்­தில் குறிப்­பிட்­டால் அவர்­க­ளுக்கு அரு­கில் உள்ள, சிடிசி பற்­றுச்­சீட்டை ஏற்­றுக்­கொள்­ளும் உண­வங்­காடி நிலை­யங்­கள், வட்­டார வியா­பா­ரக் கடை­கள் போன்­ற­வற்­றின் விவ­ரங்­கள் கிடைக்­கும்.

பற்­றுச்­சீட்­டு­க­ளைப் பெற்­றுள்ள குடும்­பத்­தி­னர் எளி­மை­யாக விவ­ரங்­களை அறிந்து­கொள்­வ­தற்கு ஏது­வாக அர­சாங்கத் தொழில்­நுட்ப அமைப்­பு­டன் இணைந்து இந்த இணை­யத்­த­ளம் உரு­வாக்­கப்­பட்டுள்­ளது. மக்­கள் கழ­க­மும் ஐந்து சமூக மேம்­பாட்டு மன்­றங்­களும் (சிடிசி) இணைந்து நேற்று இத்­த­க­வ­லைத் தெரி­வித்­தன.

இந்த இணை­யத்­த­ளம் புதிய விவ­ரங்­க­ளு­டன் தொடர்ந்து புதுப்­பிக்­கப்­படும் என்றும் அவை கூறின. பற்­றுச்­சீட்டை ஏற்­றுக்­கொள்­ளும் கடைக்­கா­ரர்­களும் வெளி­யில் அது­பற்­றிய தக­வலை காட்­சிக்கு வைத்­தி­ருப்­பர்.

கொள்ளைநோய் காலத்தில் ஒற்றுமையுணர்வை வெளிப்படுத் திய சிங்கப்பூரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக $130 மில்லியன் பற்றுச்சீட்டுத் திட்டம் டிசம்பர் 13ல் தொடங்கியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!