ஊழியர்களைக் கடந்த ஆறு மாதங்களில் பயிற்சிகளுக்கு அனுப்பி
இருப்பதாக ஆய்வில் பங்கெடுத்த வர்த்தகத் தலைவர்களில் 50 விழுக்காட்டினர் மட்டுமே தெரிவித்துள்ளனர்.
தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி), என்டியுசி லெர்னிங்ஹெப் ஆகியவை வெளியிட்ட ஊழியர் ஆய்வு அறிக்கை மூலம் இது தெரியவந்துள்ளது. வேலைக்கு ஆட்களை எடுப்பதில் சிரமத்தை எதிர்கொள்வதாக ஆய்வில் பங்கெடுத்த வர்த்தகத் தலைவர்களில் 78 விழுக்காட்டினர் கூறினர்.
எல்லைக் கட்டுப்பாடுகள்,
பல்வேறு துறைகளில் ஊழியர்
பற்றாக்குறை ஆகியவற்றால் முன் இல்லாத அளவில் சிங்கப்பூரில் 98,700 வேலைகள் காலியாக இருப்பதாக இம்மாதம் 15ஆம் தேதிமனிதவள அமைச்சு கூறியது.
சிங்கப்பூரில் உற்பத்தி, தகவல் மற்றும் தொடர்பு, நிதி, காப்புறுதிச் சேவைகள், மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம் எனப்
பல்வேறு துறைகளைச் சேர்ந்த 564 வர்த்தகத் தலைவர்கள் ஆய்வில் பங்கெடுத்தனர்.
தங்கள் ஊழியர்களைப் பயிற்சி களுக்கு அனுப்ப விரும்பும் 38 விழுக்காடு வர்த்தகத் தலைவர்
களுக்கு அதனால் ஏற்படும் செலவுதான் தடையாக உள்ளது. தகுந்த பயிற்சிகளை அடையாளம் காண்பதில் 37 விழுக்காடு
வர்த்தகத் தலைவர்கள் சிரமப்படுகின்றனர். யார் யாரைப் பயிற்சி
களுக்கு அனுப்புவது என்று தெரியவில்லை என ஆய்வில் பங்கெடுத்தவர்களில் 33 விழுக்காட்டினர் கூறினர். கூடுதல் பயிற்சி மானியம், வர்த்தக ஆலோசனைச் சேவைகள் வழங்கப்பட்டால் ஊழியர்களைப் பயிற்சிகளுக்கு அனுப்ப அவை ஊக்குவிப்பாக அமையும் என்று அறிக்கை தெரிவித்தது.
அரசாங்கம் அல்லது தொழி
லாளர் இயக்கத்தின் பயிற்சித் திட்டங்களில் ஈடுபட்டுள்ளதாக
நான்கில் மூன்று வர்த்தகத்
தலைவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் ஒட்டுமொத்த அடிப்
படையில் இத்திட்டங்கள் பயன்
படுத்தப்படும் விகிதம் மிகவும் குறைவாக உள்ளது (14 விழுக்காடு). தொழிற்சங்கப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் அவற்றின் ஊழியர்
களைப் பயிற்சிகளுக்கு அனுப்பும் சாத்தியம் அதிகம் இருப்பதாக ஆய்வு தெரிவித்தது.
என்டியுசி அதன் பயிற்சி, வேலை நியமனக் கட்டமைப்பு மூலம் தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்கள், நிறுவனங்
களின் மனிதவளப் பிரிவுகள், அரசாங்க இணையத்தளங்கள் ஆகியவை மூலம் பயிற்சித் திட்டங்கள் பற்றி வர்த்தகத் தலைவர்கள்
தெரிந்துகொள்கின்றனர்.
கடந்த ஆறு மாதங்களில் ஊழியர்களைப் பயிற்சிகளுக்கு அனுப்பிய நிறுவனங்களில் 57 விழுக்காடு நிறுவனங்கள் தொழிற்சங்கப்படுத்தப்பட்ட நிறுவனங்கள், 37 விழுக்காடு நிறுவனங்கள் தொழிற்சங்கப்படுத்தப்படாத நிறுவனங்கள்.
மென்பொருள் மேம்பாட்டாளர்கள், இணையம் மற்றும் பல்லூடக மேம்பாட்டாளர்கள், கட்டமைப்புப் பகுப்பாய்வாளர்கள், வர்த்தம் மற்றும் சந்தைப்படுத்துதல், விற்பனை அதிகாரிகள், கணக்காளர்கள், தாதியர் போன்ற வேலைகளுக்கு மேலும் பல ஊழியர்கள் தேவைப்
படுகின்றனர்.
ஊழியர் ஆய்வு அறிக்கை குறித்து கருத்துரைத்த என்டியுசி துணைத் தலைமைச் செயலாளர் சீ ஹொங் டாட், ஊழியர்களுக்கான தொடர் கல்வி, பயிற்சியை வடிவமைக்க தேசிய பயிற்சிக் கட்டமைப்பில் தொழிலாளர் இயக்கத்தின் பங்களிப்பை விரிவுப்படுத்துவது மிகவும் முக்கியம் என்று கூறினார். வேலைக்கு ஆட்களை எடுக்க முதலாளிகள் எதிர்கொள்ளும் சவால்களை முறியடிக்க, தற்போதைய ஊழியர்களின் திறன்களை மேம்படுத்துவது ஒரு வழியாகும். புதிய ஊழியர்களை வேலையில் அமர்த்துவதைக் காட்டிலும் ஏற்
கெனவே இருக்கும் ஊழியர்களின் திறன்களை மேம்படுத்துவது செலவைக் குறைக்கும் என்று என்டியுசி
லெர்னிங்ஹப் தலைமை நிர்வாகி ஜெரமி ஓங் கூறினார்.

