கூட்டு ஆராய்ச்சிக்கு $286 மி. முதலீடு

எதிர்­கா­லத்­திற்­கான மேம்­பட்ட, மேலும் துரி­த­மா­கச் செயல்­ப­டக்­

கூ­டிய கரு­வி­க­ளின் தேவை அதி­க­ரிக்­கும் என்ற நிலை­யில் சிங்­கப்­பூர் புதி­தாக $210 மில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் (S$286 மி.) மதிப்­பி­லான கூட்டு ஆராய்ச்சி முத­லீட்­டைச் செய்­ய­வுள்­ளது. இதற்­காக பகுதி மின்க­டத்தி சாத­னங்­க­ளைத் தயா­ரிக்­கும் ஜாம்­ப­வா­னான 'அப்­ளைட் மெட்­டீ­ரி­யல்ஸ்' அமெ­ரிக்க நிறு­வ­னத்­து­டன் சிங்­கப்­பூ­ரின் அறி­வி­யல், தொழில்­நுட்ப, ஆய்வு அமைப்­பின் (ஏஸ்­டார்) நுண்­மின்­ன­ணு­வி­யல் கழ­கம் (ஐஎம்இ) இணை­ய­வுள்­ளது.

இரு­த­ரப்­பு­களும் தங்­க­ளின் ஆராய்ச்சி ஒத்­து­ழைப்பை மூன்­றா­வது கட்­ட­மாக நீட்­டித்­துள்­ளன. இதன்­படி 2026ஆம் ஆண்­டு­வரை மேலும் ஐந்து ஆண்­டு­க­ளுக்கு ஆராய்ச்சி தொட­ரும்.

கூட்டு முயற்­சி­யா­கத் தொடங்­கிய இரு­த­ரப்­பு­க­ளின் ஆய்­வுக்­கூடம், 2011ஆம் ஆண்­டில் திறக்­கப்­பட்­டது. அப்­போது மேம்­பட்ட முப்­ப­ரி­மாண சில்­லு­க­ளைத் தயா­ரிக்­கும் திறனை வளர்ப்­ப­தற்கு

ஆய்­வுக்­கூ­டம் பயன்­பட்­டது.

புதி­தா­கச் செய்­யப்­படும் முத­லீடு, ஆய்வு நிலை­யத்தை மேம்­ப­டுத்­த­வும் விரி­வு­ப­டுத்­த­வும் பயன்­ப­டுத்­தப்­படும். இத­னால் கலப்­பின பிணைப்பு, வளர்ந்து வரும் இதர முப்­ப­ரி­மாண சில்லு ஒருங்­கி­ணைப்பு தொழில்­நுட்­பங்­கள் ஆகி­ய­வற்­றுக்­குத் தேவை­யான பொருள்­கள், சாத­னங்­கள், செயல்­மு­றைத் தொழில்­நுட்­பத் தீர்­வு­க­ளைத் துரி­தப்­ப­டுத்­து­வதே இலக்கு.

பகு­தி மின்கடத்தி, அமைப்­பு­

மு­றை­கள் நிறு­வ­னங்­க­ளுக்கு இந்த விரி­வாக்­கத் திட்­டம் மூலம் முழு­மை­யான கரு­வி­கள் தொகுப்­பும் தொழில்­நுட்­பத் தொகுப்­பும் கிடைக்­கும்.

பகுதி மின்­க­டத்­தி­களை உற்­பத்தி செய்­வ­தில் கலப்­பின பிணைப்­புத் தொழில்­நுட்­பம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது. எரி­சக்தி ஆற்­ற­லை­யும் அமைப்­பு­முறை செயல்­தி­ற­னை­யும் மேம்­ப­டுத்த இது உத­வு­கிறது.

இது­வரை ஆய்வு நிலை­யத்­தில் மூன்று கட்­டங்­க­ளாக நடை­பெற்­றுள்ள 'அப்­ளைட் மெட்­டீ­ரி­யல்ஸ்', 'ஏஸ்­டார்' அமைப்­பின் 'ஐஎம்இ' ஆகி­யவை கூட்­டாக மொத்­தம் $450 மில்­லி­யன் அமெ­ரிக்க டாலரை முத­லீடு செய்­துள்­ளன.

புதி­தாக அறி­விக்­கப்­பட்­டுள்ள கட்­டத்­தின்கீழ் ஆய்­வுக்­கூ­டத்­திற்கு மேலும் சுமார் 3,500 சதுர அடி இடம் உரு­வாக்­கப்­படும். அத்­து­டன் புதி­தாக 30 ஊழி­யர்­கள் வேலை­யில் அமர்த்­தப்­ப­டு­வர். தற்­போது ஆராய்ச்சி, மேம்­பாடு அம்­சங்­கள் தொடர்­பில் நிலை­யத்­தில் கிட்­டத்­தட்ட 150 ஊழி­யர்­கள் பணி­யாற்­று­கின்­ற­னர்.

இரு­த­ரப்­பு­க­ளுக்­கும் இடை­யி­லான மூன்­றா­வது கட்ட ஒத்­து­ழைப்பு நேற்று தொடங்­கியது. அந்த விழா­வில், வர்த்­தக தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் கலந்­து­கொண்­டார்.

இந்த ஆராய்ச்சி ஒத்­து­ழைப்­பால் சிங்­கப்­பூ­ரின் மேலும் பரந்து விரிந்த பகுதி மின்­க­டத்தி உற்­பத்­திக் கட்­ட­மைப்­பில் கூடு­தல் பங்­கா­ளி­கள் பல­ன­டை­வர் என்று ஏஸ்­டார் அமைப்­பின் அறி­வி­யல், பொறி­யி­யல் ஆராய்ச்சி மன்­றத்­தின் உதவி தலைமை நிர்­வாகி பேரா­சி­ரி­யர் அல்­ஃபி­ரட் ஹுவான் கூறி­னார்.

"குறைந்த விலை­யில், மேம்­பட்ட மேலும் விரை­வா­கச் செயல்­படும் கரு­வி­கள் நமக்­குத் தொடர்ந்து தேவைப்­படும் நிலை­யில், எதிர்­கா­லத்­தில் கைகொ­டுக்­கும் பல்­வேறு கரு­வி­களை உரு­வாக்­கு­வ­தற்கு இந்த மூன்­றாம் கட்ட ஆராய்ச்­சி­தான் அடித்­த­ள­மாக இருக்­கும்," என்­றார் ஏஸ்­டார் ஐஎம்இ பிரி­வின் நிர்­வாக இயக்­கு­நர் டெரன்ஸ் கான்.

சிங்­கப்­பூ­ரின் கடந்த 30 ஆண்டு ­க­ளாக 'அப்­ளைட் மெட்­டீ­ரி­யல்ஸ்' நிறு­வ­னம் இயங்கி வரு­கிறது. ஆராய்ச்சி, மேம்­பாடு தொடர்­பில் இங்கு மூன்று ஆய்­வுக்­கூ­டங்­களை அது அமைத்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!