ரயீசா கான்: பொய் கூறியதற்குப் பொறுப்பேற்க பிரித்தம் சிங் என்னிடம் சொல்லவில்லை

ரயீசா கான்: பொய் கூறியதற்குப் பொறுப்பேற்க பிரித்தம் சிங் என்னிடம் சொல்லவில்லை

4 mins read
05f6246c-c1bd-49bd-88ba-fd745412ead9
விசாரணைக் குழு கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த ரயீசா கான். படம்: GOV.SG -

நாடா­ளு­மன்­றத்­தில் பொய் கூறி­ய­தற்­குப் பொறுப்­பேற்­க­வும் அதைத் தெளி­வுப்­ப­டுத்­தும் வகை­யில் விளக்க­மளிக்­க­வும் பாட்­டா­ளிக்

கட்­சி­யின் தலை­மைச் செய­லா­ளர் பிரித்­தம் சிங் தம்­மி­டம் சொல்­ல­வில்லை என்று நாடா­ளு­மன்ற விசா­ர­ணைக் குழு­வி­டம் செங்­காங் குழுத் தொகுதி­யின் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ரயீசா கான் நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தார்.

மாறாக, கூறிய பொய்யை இறுதி வரை தற்­காத்­துப் பேசும்­படி திரு சிங் கூறி­ய­தாக ரயீசா கான் தெரி­வித்­தார்.

நாடா­ளு­மன்ற விசா­ர­ணைக் குழு­வுக்கு முன்பு மூன்­றா­வது முறை­யாக முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்ட ரயீசா கான், கடந்த அக்­டோ­பர் மாதம் 3ஆம் தேதி திரு சிங்­கு­டன் நடந்த சந்­திப்­பின்­போது நிகழ்ந்­த­வற்­றைப் பற்றி கேட்­கப்­பட்ட

கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளித்­தார்.

இம்­மா­தம் 2ஆம், 3ஆம் தேதி­களில் சொன்­ன­தையே நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற விசா­ர­ணை­யில் அவர் தெரி­வித்­தார்.

பொய் கூறி­ய­தற்குப் பொறுப்­பேற்று அதைத் தெளி­வுப்­ப­டுத்த வேண்­டும் என்று ரயீசா கானி­டம் தாம் தெரி­வித்­தி­ருந்­த­தாக விசா­ர­ணைக் குழு­வி­டம் திரு சிங் தெரி­வித்­தி­ருந்­தார். இதை ரயீசா கான் நேற்று முன்­தி­னம் மறுத்­தார்.

தாம் உண்­மை­யைப் பேசு­வ­தா­க­வும் சத்­தி­யப் பிர­மா­ணம் எடுத்­துக்­கொண்டு பொய் கூறப்­போ­வ­தில்லை என்­றும் நேற்று ஒரு மணி நேரத்­துக்கு நடை­பெற்ற விசா­ர­ணை­யின்­போது ரயீசா கான் தெரி­வித்­தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி­யன்று நாடா­ளு­மன்­றத்­தில் பொய் கூறி­யது தொடர்­பான

விசா­ரணை நடத்­தப்­ப­டு­கிறது.

பாலி­யல் வன்­கொ­டு­மை­யால் பாதிக்­கப்­பட்ட பெண் ஒரு­வ­ரு­டன் தாம் காவல் நிலை­யத்­துக்­குச் சென்­றி­ருந்­த­தாக ரயீசா கான் நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தி­ருந்­தார்.

காவல் அதி­கா­ரி­கள் கேட்ட முறை­யற்ற கேள்­வி­க­ளால் அப்­பெண் கண்­ணீர்­விட்டு அழு­த­தாக அவர் கூறி­னார். ஆனால் கடந்த மாதம் 1ஆம் தேதி­யன்று தாம் பொய் கூறி­யதை அவர் ஒப்­புக்­கொண்­டார்.

பொய் சொன்­னது குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதிக்­குள் பாட்­டா­ளிக் கட்­சித் தலை­வர்­க­ளி­டம் தெரி­வித்­த­தா­கக் கூறி­னார்.

கடந்த அக்­டோ­பர் மாதம் 3ஆம் தேதி­யன்று பொய் கூறி­யதை

ஒப்­புக்­கொள்­ளா­மல் அதைத் தொடர்ந்­தால் தம்­மைப் பற்றி

தவ­றாக நினைக்­கப்­போ­வ­தில்லை என்று திரு சிங் கூறி­ய­தாக ரயீசா கான் தெரி­வித்­தார்.

இதைத் திரு சிங் மறுத்­தார். அக்­டோ­பர் 3ஆம் தேதி­யன்று ரயீசா கானைச் சந்­தித்­த­போது பொய் கூறி­ய­தற்­குப் பொறுப்­பேற்க வேண்­டும் என்­றும் தாம் எதிர்­பார்ப்­ப­தாக அவ­ரி­டம் தாம் கூறி­ய­தாக திரு சிங் கூறி­னார்.

உண்­மையைக் கூற வேண்­டும் என்­பதே அதற்­குப் பொருள் என்று இம்­மா­தம் 10ஆம் தேதி நடை­பெற்ற விசா­ர­ணை­யின்­போது அவர் தெரி­வித்­தார்.

அக்­டோ­பர் 3ஆம் தேதி நடந்த சந்­திப்­பின்­போது வேறு யாரும் அங்கு இல்லை என்று ரயீசா கான் கூறி­யது அதிர்ச்சி அளிப்­ப­தாக திரு சிங் தெரி­வித்­தார்.

அன்­றி­ரவு நடந்த சந்­திப்­பின்­போது ரயீசா கானின் குடும்­பத்­தி­னர் அனை­வ­ரும் அங்கு இருந்­த­தாக அவர் கூறி­னார்.

அந்­தச் சந்­திப்­புக்கு மறு­நாள் இந்த விவ­கா­ரம் குறித்து ரயீசா கான் நாடா­ளு­மன்­றத்­தில் மீண்­டும் பொய் கூறி­னார். அப்­போது அவர் சட்ட, உள்­துறை அமைச்­சர்

கா. சண்­மு­கம் கேட்ட கேள்­வி

­க­ளுக்­குப் பதி­ல­ளித்­துக்­கொண்­டி­ருந்­தார். அடுத்து என்ன செய்ய வேண்­டும் என்று சிங்­கி­டம் கேட்டு ரயீசா கான் அப்போது குறுந்

த­க­வல் அனுப்­பி­னார். இந்­தக் குறுந்­த­க­வல் பற்றி திரு சிங்­கி­டம் கேள்வி எழுப்­பப்­பட்­ட­போது ரயீசா கான் உண்­மை­யைப் பேச வேண்­டும் என்­பதே தமது நிலைப்­பா­டாக இருந்­த­தாக அவர் பதி­ல­ளித்­தார்.

ஆனால் இது­கு­றித்து நேற்று முன்­தி­னம் விசா­ர­ணைக் குழு­

வி­டம் பேசிய ரயீசா கான், அடுத்து என்ன செய்ய வேண்­டும் எனத் தெரி­யா­த­தால் திரு சிங்­கிற்­குக் குறுந்­த­க­வல் அனுப்­பி­ய­தா­கக் கூறி­னார்.

"சொன்­ன­தையே திரும்­பச் சொல்­லக் கூறு­வார் என்று நினைத்­தேன். அதற்கு முதல் நாள் இரவு அதைத்­தான் அவர் என்­னி­டம் தெரி­வித்­தார்," என்று ரயீசா கான் கூறி­னார்.

அனுப்­பிய குறுந்­த­க­வ­லுக்­குத் திரு சிங் பதி­ல­ளிக்­கா­த­போது, அவர் கூறி­யது போல தாம் தொடர்ந்து பொய் சொன்­ன­தாக ரயீசா கான் தெரி­வித்­தார்.

நாடா­ளு­மன்­றத்­தில் பொய் சொல்ல தாம் தூண்­டி­ய­தாக ரயீசா கான் கூறு­வது முற்றிலும் பொய் என்று திரு சிங் தெரி­வித்­துள்­ளார்.

அக்­டோ­பர் மாதம் 4ஆம் தேதி­ரயீசா கான் நாடா­ளு­மன்­றத்­தில் மீண்­டும் பொய் கூறி­யதை அடுத்து, அவ­ரி­டம் தாம் கடிந்­து­கொண்­ட­தாக அவர் கூறி­னார்.

இந்நிலையில், மன­ந­லம் பாதிக்­கப்­பட்­ட­வர் என்று பாட்­டா­ளிக்

கட்­சித் தலை­வர்­கள் தம்மை வர்­ணிப்­பது முறை­யல்ல என்றார் ரயீசா கான். பிந்­தைய மன­உ­ளைச்­சல் சீர்­கேடு எனும் பாதிப்பு தமக்கு ஏற்­பட்­டி­ருக்­கக்­கூ­டும் என்று தமக்­குச் சிகிச்சை அளித்த மருத்­துவ நிபு­ணர் கூறி­ய­தா­கக் கடந்த மாதம் 29ஆம் தேதி­யன்று பாட்­டா­ளிக் கட்­சி­யின் ஒழுங்கு நட­வ­டிக்கை குழு­வி­டம் ரயீசா கான் தெரி­வித்­தி­ருந்­தார்.

ஆனால் அப்­போது தமக்கு

அந்­தப் பாதிப்பு இருந்­த­தா­கத் தாம் கூற­வில்லை என்­றார் அவர்.

இதற்­கி­டையே, பொய் கூறத் தூண்­டும் மிக மோச­மான மன­நல பாதிப்­பால் ரயீசா கான் பாதிப்­

ப­டை­ய­வில்லை என்று விசா­ர­ணைக் குழு­வி­டம் மன­ந­லக் கழ­கத்­தின் தட­ய­வி­யல் மன­ந­லப் பிரி­வின் தற்­கா­லி­கத் தலை­வர் டாக்­டர் கிறிஸ்­ட­ஃபர் சியோக் நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தார்.

சுய­மா­கச் சிந்­தித்து நாடா­ளு­மன்­றத்­தில் பேசும் ஆற்­றல் அவ­ருக்கு இருப்­ப­தாக டாக்­டர் சியோக் கூறி­னார். ரயீசா கானின் சம்­ம­தத்­து­டன் இம்­மா­தம் 17ஆம், 20ஆம் தேதி­களில் அவரை டாக்­டர் சியோக் மதிப்­பீடு செய்­தார்.