கொடுத்த பரிசுப்பொருளை
ஏற்றுக்கொள்ள மறுத்த இருவரை ஆடவர் ஒருவர் இவ்வாண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து ஜூலை மாதம் வரை விடாமல் பின்
தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் குற்றத்தை 21 வயது சூன் சியேன் ஃபெங் ஒப்புக்கொண்டார்.
பாதிக்கப்பட்ட இருவரின் அடையாளத்தைக் காக்க அவர்
களது பெயர்களை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்
பட்டுள்ளது.
இவ்விருவரின் வீட்டின்
கதவுக்கு வெளியே புகைத்து முடித்த சிகரெட்டுகளை சூன் விட்டுச் சென்றதாகவும் முட்டைகளை வீசி உடைத்ததாகவும் கூறப்படுகிறது.
வீட்டிற்குள் அவர்கள் என்ன செய்கிறார்கள் எனப் பார்க்க விரும்புவதாகவும் சன்னல்களைத் திறந்துவைத்திருக்கவும் கூறி வீட்டிற்கு வெளியே இரண்டு
கடிதங்களை சூன் விட்டுச் சென்றதாகவும் அரசாங்க
வழக்கறிஞர் கூறினார்.

