பிரபல நிறுவனங்கள் இலவசப் பொருட்களை தருவதாக இணையம் மூலம் தகவல்களோ இணைப்பு களோ அனுப்பப்பட்டால் அவை மோசடிக்காரர்கள் விரிக்கும் வலையாக இருக்கக்கூடும் என்ற புரிதல் பொதுமக்களுக்கு இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்
படுகிறது.
பண்டிகைக் காலத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி இத்தகைய பல மோசடிகள் நிகழ்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையம் மூலம் பொதுமக்களின் தனிப்பட்ட விவரங்களைப் பெறும் மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக இணையப் பாதுகாப்பு நிறுவனமான குரூப்-1பி எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுவாக தொலைத்தொடர்பு நிறுவனங்களைப் போல பாசாங்கு செய்து, ஆய்வில் பங்கெடுத்தால் இலவசப் பொருட்கள் வழங்கப்படும் என ஆசை காட்டி தனிப்பட்ட விவரங்களை மோசடிக்
காரர்கள் பெற்றுக்கொள்கின்றனர். இதுதொடர்பாக உள்ளூர் தொலைத்தொடர்பு நிறுவனங்
களிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அவை கேட்டுக்கொண்டன.
இத்தகைய மோசடி முதன்
முதலாக 2018ஆம் ஆண்டில் தலைதூக்கியதாகக் கூறப்படுகிறது. உலகளாவிய நிலையில் சில பிரபலமான நிறுவனங்கள் போல பாசாங்கு செய்து மோசடி செய்யப்பட்டது. ஆனால் இந்த
ஆண்டில் 91 நாடுகளில் குறைந்தது 121 பிரபல நிறுவனங்களின் பெயரைப் பயன்படுத்தி மோசடி புரியப்பட்டது. பலர் நம்பி ஏமாறு வதாலும் கொவிட்-19 சூழல் நிலவு வதாலும் இத்தகைய மோசடிக் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக குரூப்- 1பியின் மின்னிலக்க அபாயப் பாதுகாப்புப் பிரிவின் (ஆசிய பசிபிக்) தலைவர் திரு இலியா ரோஸ்னோவ் கூறினார்.
"கொவிட்-19 நெருக்கடிநிலை பய உணர்வை அதிகரித்துள்ளது. மனவுளைச்சலால் திணறுபவர்
களால் சரியாக யோசிக்க முடியாது. இதை மோசடிக்காரர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்
படுத்துகின்றனர்," என்றார் அவர்.

