எக்சிக்யூட்டிவ் கொண்டோமினியம் கட்டுவதற்காக புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 8ல் ஒதுக்கப்பட்டுள்ள நிலம் நேற்று பொது ஏலக்குத்தகை மூலம் விற்பனைக்கு விடப்பட்டது.
அந்த நிலப்பகுதிக்கான குத்தகைக் காலம் 99 ஆண்டு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏறத்தாழ 375 வீடுகள் கட்டப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், நில
விற்பனைத் திட்டத்தின்கீழ் விற்பனைக்கு விடுகிறது.
புக்கிட் கொம்பாக் எம்ஆர்டி நிலையத்திலிருந்து பத்து நிமிட நடை தூரத்தில் இந்த நிலம் இருக்கிறது. புக்கிட் பாத்தோக் ஹில்சைட் பூங்கா, டன்னர்ன் உயர்
நிலைப்பள்ளி, எதிர்காலத்தில் கட்டப்பட இருக்கும் உயர்மாடி குடியிருப்புகள் ஆகியவற்றின் அருகில் இந்த நிலம் உள்ளது.
புதிய எக்சிக்யூட்டிவ் கொண்டோமினியம் வீடுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் இந்த நிலத்தில் எக்சிக்யூட்டிவ் கொண்டோமினியத்தைக் கட்டித் தருவதில் சொத்து மேம்பாட்டாளர்கள் பலர் ஆர்வம் காட்டுவர் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
தனியார் வீடுகளைவிட
எக்சிக்யூட்டிவ் கொண்டோமினியம் வீடுகள் கட்டுப்படியான விலையில் இருப்பதால் வீடு வாங்குவோர் மத்தியில் அது
பிரபலமாக இருப்பதை பிராப்னெக்ஸ் சொத்து நிறுவனத்தின் தலைமை நிர்வாகி இஸ்மாயில் கஃபூர் சுட்டினார்.
அண்மையில் அறிவிக்கப்பட்ட வீட்டு விலை தணிக்கும் நட
வடிக்கைகளால் அதிகம் பாதிக்கப்படாத முதல்முறை வீடு வாங்கும் சிலர் எக்சிக்யூட்டிவ் கொண்டோமினியம் வீடு வாங்குவது தொடர்பாக எண்ணம் கொண்டிருக்கக்கூடும் என்று திரு இஸ்மாயில் கஃபூர் கூறினார்.

