கையூட்டு: ரகசிய தகவல்களை கோரியதற்கு $20,000 அபராதம்

கையூட்டு: ரகசிய தகவல்களை கோரியதற்கு $20,000 அபராதம்

2 mins read
5b7a57e6-bc87-4cd6-bee5-8ed136097de8
-

கால­ணி­களை மறு­விற்­பனை செய்­யும் 26 வயது மெங் ஃபான்ஷு­வென், புத்­தம் புதிய 'ஸ்னீக்­கர்' வகை கால­ணி­கள் எப்­போது வெளி­யி­டப்­படும் என்ற ரக­சி­யத் தக­வல்­களை அறிந்­திட 'ஃபூட் லாக்­கர் சிங்­கப்­பூர்' நிறு­வன ஊழி­யர் ஒரு­வ­ருக்கு 22 முறை கையூட்டு வழங்­கி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

ஊழி­ய­ருக்கு மெங் கிட்­டத்­தட்ட $5,700ஐ லஞ்­ச­மா­கக் கொடுத்­திருந்­தார் என்று அறி­யப்­ப­டு­கிறது.

புதிய வெளி­யீ­டு­கள், விலைக் கழி­வு­கள் தொடர்­பான ரக­சி­யத் தக­வல்­களை மெங் அறிந்­து­கொண்­ட­தால் மறு­விற்­ப­னைச் சந்­தை­யில் அவ­ருக்­குச் சாதக நிலை ஏற்­பட்­டது.

இவ்­வகை கால­ணி­களை அவர் விற்­ற­தன் மூலம் சுமார் $6,000 சம்­பா­தித்­தார். குற்­றம் நடந்த கால­கட்­டத்­தில் சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வாசி­யான மெங், முழு­நேர தேசிய சேவை­யா­ள­ராக இருந்­தார் என்று குறிப்­பி­டப்­பட்­டது.

மொத்­தம் $5,681ஐ கையூட்­டாக தந்த குற்­றச்­சாட்டு தொடர்­பில் அவ­ருக்கு நேற்று $20,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

சீன நாட்­ட­வ­ரான மெங், 2008ஆம் ஆண்­டி­லி­ருந்து 'ஸ்னீக்­கர்' வகை கால­ணி­க­ளைச் சேக­ரித்து வந்தார். 2019ஆம் ஆண்­டில் 'நைக்கி ஸ்னீக்­கர்' கால­ணி­களை மறு­விற்­பனை செய்து $29,000 லாபம் ஈட்­டி­யதை அடுத்து மறு­விற்­பனை செய்­யும் தொழி­லில் முழு­மை­யாக இறங்­கி­னார்.

அந்த விற்­ப­னைக்­குப் பிறகு 'ஸ்னீக்­கர்' கால­ணி­க­ளைத் தேடிப் பிடித்து அவற்றை விற்க முயன்றார். இவ­ரின் வாடிக்­கை­யா­ளர்­கள் பெரும்­பா­லும் சீனா­வைச் சேர்ந்­த­வர்­கள் என்று கூறப்­பட்­டது.

ஜுவல் சாங்கி விமான நிலை­யத்­தின் 'ஃபூட் லாக்­கர்' கிளை ஊழி­யர் ஒரு­வரை மெங் கடந்த ஆண்டு அணுகி காலணி தொடர்­பில் ரக­சிய தக­வல்­க­ளைத் தனக்­குத் தெரி­வித்­தால் லாபத்­தில் ஒரு பங்கு தரு­வ­தா­கக் கூறி­னார்.

புதிய காலணிகள் பற்றி 'ஃபூட் லாக்­கர்' ஊழி­யர்­கள் முத­லில் அறிவர் என்­ப­தால் மெங் அவரை அணு­கி­ய­தா­கக் கூறப்­பட்­டது.