புவாங்காக் பகுதியில் கத்திக்குத்து: ஐவர் கைது

புவாங்­காக் பகு­தி­யில் நேற்று முன்­தி­னம் மூண்ட சண்­டை­யில் கத்தி ஒன்று பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தா­க­வும் ஆட­வர் ஒரு­வ­ருக்­குக் கைக­ளி­லும் முகத்­தி­லும் காயங்­கள் இருந்­த­தா­க­வும் கூறப்­பட்­டது.

இது தொடர்­பில் காவ­லர்­கள் ஐந்து ஆட­வர்­க­ளைக் கைது செய்துள்­ள­னர்.

புவாங்­காக் ஸ்கு­வேர் கடைத்­தொ­குதி அருகே உள்ள புவாங்­காக் கிர­சண்டில் 24 வயது ஆட­வர் ஒரு­வர் அதே வய­து­டைய மற்­றோர் ஆட­வ­ரைத் தாக்­கி­ உள்­ள­தாக புதன்­கி­ழமை காலை 5.30 மணி­ய­ள­வில் காவ­லர்­க­ளுக்­குத் தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது.

வாக்­கு­வா­தம் ஏற்­பட்­டதை அடுத்து கத்­தி­யைக் கொண்டு ஒரு­வர் இன்­னொ­ரு­வர் மீது தாக்­கு­தல் நடத்­தி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

கைக­லப்­புக்­குப் பிறகு காய­மடைந்­த­வர் மருத்­து­வ­ம­னைக்­குச் சிகிச்சை பெறச் சென்­றார்.

அதே நாளில் காவ­லர் கண்­கா­ணிப்பு கேம­ராக்­களில் பதி­வான படங்­க­ளைக் கொண்டு பொது­மக்­க­ளி­டம் விசா­ரித்து சம்­ப­வம் தொடர்­பான அறு­வ­ரை­யும் காவ­லர்­கள் அடை­யா­ளம் கண்­ட­னர்.

அதை­ய­டுத்து, 21 வய­துக்­கும் 27 வய­துக்­கும் இடைப்­பட்ட ஐந்து சந்­தேக நபர்­க­ளை­யும் காவ­லர்­கள் கைது செய்­த­னர். இதற்­கி­டையே விசா­ர­ணை­யில் 27 வயது பெண் ஒரு­வ­ரும் உதவி வரு­வ­தா­கக் கூறப்­பட்­டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!