$500,000 மோசடி: முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மீது குற்றச்சாட்டு

$500,000 மோசடி: முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மீது குற்றச்சாட்டு

1 mins read
2de6b621-0a09-444d-826f-50ff828c5c9a
-

பணத்தைக் கையாடியதாக 'ஆரியண்டல் குருப் லிமிடெட்' நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மீது இம்மாதத் தொடக்கத்தில் குற்றம் சாட்டப்பட்டது. நவம்பர் 2014க்கும் ஆகஸ்ட் 2015க்கும் இடைப்பட்ட காலத்தில் தலைமை நிர்வாக அதிகாரி என்ற பொறுப்பை நம்பி தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட $500,000ஐ 45 வயது லீ வான் சிங் கையாடியதாகக் கூறப் படுகிறது. விசாரணை தொடங்குவதற்கு முன் லீ சிங்கப்பூரை விட்டுச் சென்றதாகவும் மலேசிய அதிகாரிகளின் உதவியுடன் மலேசியாவில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. தற்போது லீ மீதான விசாரணை தொடர்கிறது.

இதற்கிடையே 'ஆரியண்டல் குருப்' நிறுவனத்தின் முன்னாள் குழும நிதிக் கட்டுப்பாட்டாளர், முன்னாள் நிதி மேலாளர், முன்னாள் பங்குதாரர் ஆகியோர் உள்பட மேலும் பத்து பேர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவாகி உள்ளன. நிறுவனத்தின் பங்கு விலையைப் பொய்யாகக் காட்டுவதற்கு மூவரும் வேறு பலருடன் இணைந்து சதித் திட்டம் தீட்டியதாகக் கூறப்படுகிறது.