பாத்தாம் சொத்து விவகாரம்: சில சிங்கப்பூரர்கள் கவலை

3 mins read
c61cdd10-7277-4aaa-84a9-8b2ec5319513
இடிக்கப்பட்ட அடுக்குவீடுகளில் ஒன்று. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர் -

இந்­தோ­னீ­சி­யா­வின் பாத்­தாம் தீவிலுள்ள 'இண்டா புரி கோல்ஃப் ரிசோர்ட்' என்­னும் உல்­லாச தங்­கு­மி­டத்தை இடிப்­ப­தன் தொடர்­பில் அந்­தக் கட்­ட­டத்­தின் மேம்­பாட்­டா­ள­ருக்­கும் அதில் தங்­கி­யி­ருப்­போ­ருக்­கும் இடை­யில் பிரச்­சினை வெடித்­துள்­ளது. 1993ஆம் ஆண்­டில் திறக்­கப்­பட்ட அந்த உல்­லா­சத் தங்­கு­

மி­டத்­தில் உள்ள அடுக்­கு­வீ­டு­களை நூற்­றுக்­கும் மேற்­பட்­டோர் நீண்­ட­கா­லக் குத்­த­கைக்கு எடுத்து அனு­ப­வித்து வரு­கின்­ற­னர்.

சில சிங்­கப்­பூ­ரர்­களும் அவர்­களில் அடங்­கு­வர். இந்த விவகாரத் தால் தற்போது அவர்கள் கவலை அடைந்துள்ளனர். உள்­ளூர்­வா­சி­களும் அந்­தத் தங்­கு­மி­டத்­தில் அடுக்­கு­வீ­டு­க­ளைக் குத்­த­கைக்கு எடுத்­துள்­ள­னர்.

'குத்ரீ ெஜயா இண்டா ஐலண்ட் ரிசோர்ட்' என்­னும் நிறு­வ­னத்துக்குச் சொந்தமானது இந்தக் கட்டடம். நான்கு தளங்­க­ளைக் கொண்ட உல்­லா­சத் தங்­கு­மி­டம் பழை­ய­தா­கி­ விட்­ட­தா­கக் கூறி, அதை இடிக்க முடிவு செய்­துள்­ளது இந்நிறுவனம்.

முழு­மை­யாக அதனை அப்­பு­றப்­ப­டுத்­தி­விட்டு 10 தளங்­க­ளைக் கொண்ட வர்த்­த­கக் கட்­ட­டத்தை எழுப்­ப­வும் அது திட்­ட­மிட்­டுள்­ளது.

அத­னைத் தொடர்ந்து இம்­

மா­தம் 13ஆம் தேதி இடிப்பு வேலை­கள் தொடங்­கின. அந்­தக் கட்­டட வளா­கத்­தில் உள்ள 10 அடுக்­கு­வீடு­களில் ஐந்து இடிக்கப்பட்டன. ஆனால் அந்த வீடு­க­ளைக் காலி செய்­யாத குடி­யி­ருப்­பா­ளர்­கள் பலர் இடிப்­பதை எதிர்க்­கின்­ற­னர்.

சட்­ட­வி­ரோ­த­மாக தங்­க­ளது வீடு­க­ளைக் கைப்­பற்றி பல­வந்­த­மா­கத் தங்­களை வெளி­யேற்­று­மாறு தங்­கு­மிட மேம்­பாட்­டா­ளர் வற்­பு­றுத்­து­வ­தாக அவர்­கள் புகார் தெரி­விக்­கின்­ற­னர்.

பிரச்­சினை பெரி­தாகி, வீடு­களைக் குத்­த­கைக்கு எடுத்­தி­ருப்­போ­ருக்­கும் மேம்­பாட்டு நிறு­வன ஊழி­யர்­க­ளுக்­கும் இடை­யில் மோதல் ஏற்­படும் நிலை ஏற்­பட்­டது. அம­லாக்க அதி­கா­ரி­களும் இந்­தப் பிரச்­சி­னை­யில் சிக்­கிக்­கொண்­ட­னர். அதன் விளை­வாக, கைக­லப்­பும் அத­னைத் தொடர்ந்து கைது நட­வ­டிக்­கை­யும் இடம்­பெற்­றன.

"குடி­யி­ருப்­பா­ளர்­க­ளு­டன் மிக­வும் பணி­வாக நடந்­து­கொண்­டோம். அவர்­கள் மீது பரி­வு­காட்­டும் வித­மாக மூன்­றாண்­டு­க­ளுக்கு இல­வ­ச­மா­கத் தங்க அனு­ம­தித்­தோம். அங்கு தங்­கி­யி­ருந்த பல­ரும் குத்­த­கைக் காலம் 2018ல் காலா­வ­தி­யா­வ­தைத் தெரிந்­து­கொண்டு மற்­ற­வர்­க­ளி­டம் வீட்டை மாற்­றி­விட்­ட­னர். காலா­வதி பற்றி அவர்­க­ளி­டம் தக­வல் தெரி­விக்­க­வில்லை," என்று மேம்­பாட்­டா­ள­ரின் வழக்­க­றி­ஞர் சிஎன்ஏ செய்­தி­யா­ள­ரி­டம் கூறி­னார்.

ஆனால், 25 ஆண்டு குத்­தகை காலா­வ­தி­யா­ன­தும் மீண்­டும் புதுப்­பித்­துத் தரு­வ­தாக மேம்­பாட்­டா­ளர் கூறி­ய­தா­க­வும் அதற்­காக நிறைய பணம் தந்­தி­ருப்­ப­தா­க­வும் குடி­

யி­ருப்­பா­ளர்­கள் தெரி­வித்­த­னர்.

இந்த வளா­கத்­தில் சிங்­கப்­பூ­ரர்­கள் குறைந்­த­பட்­சம் 14 வீடு­க­ளைக் குத்­த­கைக்குப் பெற்றிருப்­ப­தா­க­வும் கொள்­ளை­நோய் கார­ண­மாக விதிக்­கப்­பட்ட எல்­லைக் கட்­டுப்­பாட்­டால் அவர்­க­ளால் நேரில் வந்து பிரச்­சி­னைக்­குத் தீர்வுகாண இய­ல­வில்லை என்­றும் சிந்­தியா வீ-ஹோஃபர், 70, என்­னும் சிங்­கப்­பூ­ரர் கூறி­னார்.

மற்­றொரு சிங்­கப்­பூ­ர­ரான பாட் குவோக் சார்­பாக அவ­ரது சகோ­தரி கூறு­கை­யில், 2019ல் தமது சகோ­த­ர­ரின் வீட்­டின் குத்­தகை நீட்­டிப்­புக்­காக இண்டா புரி நிர்­வா­கம் $300,000க்கு மேல் நிர்­ண­யித்­த­தா­கத் தெரி­வித்­தார்.

ஆனால் அதனை மறுத்த வழக்­க­றி­ஞர் திரு மங்­காரா மனு­ருங், குடி­யி­ருப்­பா­ளர்­கள் கையெ­ழுத்­திட்­டுள்ள ஒப்­பந்­தப் பத்­தி­ரத்­தில் குத்­தகை நீட்­டிப்­புப் பற்­றியோ புதுப்­பிப்பு பற்றியோ எது­வும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை என தெரி­வித்­தார்.

"காலி­யாக உள்ள வீடு­கள் மட்­டுமே இடிக்­கப்­பட்­ட­தா­க­வும் ஆட்­கள் தங்­கி­யுள்ள கட்­ட­டத்தை இடிப்­பது மனி­தா­பி­மா­ன­மற்ற செயல். அதனை நாங்­கள் செய்­ய­வில்லை," என்­றார் அவர்.

தற்­போது இந்த விவ­கா­ரம் பாத்­தாம் வட்­டார நீதி­மன்­றத்­திற்­குச் சென்­றுள்­ளது.

சிங்கப்பூரர்கள் உட்பட 60 அடுக்கு வீட்டு உரிமையாளர்கள் சார்பாக வாதாடும் வழக்கறிஞர் ராபி பத்து பாரா, வீடுகளின் மின், தண்ணீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுவிட்ட தாகக் கூறினார்.

உல்லாச அடுக்குவீடுகள் இடிப்பு, கைகலப்பு, கைது, நீதிமன்றத்தில் வழக்கு