தேவையுள்ளோருக்குக் கொடுத்து உதவுவதில் மகிழ்ச்சியடையும் தாதி ஒருவர் நேற்று பாராட்டப்பட்டார். அலெக்சாண்ட்ரா மருத்துவமனையின் வலிநீக்கப் பராமரிப்பு தாதியாகப் பணிபுரியும் எமிலி யாப், 22, என்பவர் அந்தப் பாராட்டைப் பெற்றார். தமது குடும்பத்துக்கு அரசாங்கம் வழங்கிய $100 சிடிசி பற்றுச்சீட்டை அப்பர் தாம்சனில் உள்ள செயின்ட் தெரசா இல்லவாசி
களுக்கு உணவளிக்கப் பயன்படுத்தினார் அவர்.
100 கேரட் கேக் உணவுப் பொட்டலங்களை அந்த இல்ல
வாசிகளுக்கு அவர் வழங்கினார்.
டன்னர்ன் அக்கம்பக்கக் குழு அடித்தள அமைப்பின் உறுப்பினரான திருவாட்டி யாப், புக்கிட் தீமா உணவங்காடி நிலையத்திலுள்ள கேரட் கேக் கடைக்கும் உதவுவது அவரது நோக்கமாக இருந்தது.
தமது குடும்பத்துக்காக வழங்கப்பட்ட பற்றுச்சீட்டை இருதரப்பினருக்கு உதவிய அவரது செயலை நேற்றைய ஒரு நிகழ்வில் தேசிய வளர்ச்சி, வெளியுறவு மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் வெகுவாகப் புகழ்ந்தார்.
திருவாட்டி எமிலியும் மேலும் சிலரும் ஒன்றுசேர்ந்து மூத்தோரை உள்ளடக்கிய அந்த இல்லவாசி களுக்கு உணவுப் பொட்டலங்களை விநியோகித்தனர்.

