பாதுகாப்பு இடைவெளித் தூதர்களை அவமதித்த ஐந்து வெவ்வேறு சம்பவங்கள் தொடர்பில் ஆறு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை நேற்று தனது அறிக்கையில் கூறியது.
அக்டோபர் 13ஆம் தேதி கேன்பெரா பிளாசா கடைத்தொகுதிக்குள் 51 வயது ஆடவர் ஒருவர் நுழைய முயன்றார். தடுப்பூசிச் சான்றிதழை அவரிடம் பாதுகாப்பு இடைவெளி தூதர் கேட்டபோது தம்மிடம் கைபேசியோ டிரேஸ்டுகெதர் சாதனமோ இல்லை என்று கூறினார்.
தடுப்பூசி போடாதவர்களுக்கு கடைத்தொகுதியில் நுழைய அனுமதி இல்லை என்னும் உத்தரவு நடப்பிற்கு வர அப்போது ஒருவார கால அவகாசம் இருந்ததால் அவரை அந்தத் தூதர் கடைத்தொகுதிக்குள் செல்ல அனுமதித்தார். இனிமேல் வரும்போது தடுப்பூசிச் சான்றிதழைக் காண்பிக்க வேண்டும் என்று அப்போது அவர் கூறியபோது ஆத்திரமடைந்த ஆடவர், அந்தத் தூதரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். பின்னர் தமது கைபேசி மூலம் தூதரைப் படமெடுக்க முயன்றார்.
முகத்தை மறைக்க முயன்ற தூதரின் கையை ஆடவர் தட்டிவிட்டார். அரசு ஊழியரிடம் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டது தொடர்பான விசாரணைக்கு ஆடவர் உதவி வருகிறார் என்று காவல்துறை கூறியுள்ளது.
மற்றொரு சம்பவம் சைனா
டவுன் பாய்ண்ட்டில் நிகழ்ந்தது. பாதுகாப்பு இடைவெளித் தூதரின் முகக்கவசத்தை 57 வயது ஆடவர் ஒருவர் கீேழ இறக்கிவிட்டதோடு அவரைத் தள்ளிவிட்டார். தடுப்பூசி போட்டதற்கான ஆவணத்தை அவர் காட்டாததால் கடைத்தொகுதிக்குள் நுழைய தூதர் மறுத்தபோது இச்சம்பவம் நடந்தது. ஆடவர் கைது செய்யப்பட்டார்.
அக்டோபர் 27ஆம் தேதி 43 வயது ஆடவர் ஒருவர் புவாங்காக் சதுக்கத்தினுள் நுழைய முயன்றபோது ெதாந்தரவு தந்ததாக காவல்துறையை பாதுகாப்பு இடைவெளித் தூதர் அழைத்தார். தூதரை நோக்கி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்திய அவர் கைது செய்யப்பட்டார்.
மூன்று நாள்கள் கழித்து கேன்பெரா பிளாசாவில் 30 வயது ஆடவரும் அவருடன் இருந்த பெண்ணும் பாதுகாப்பு இடை
வெளித் தூதரை தகாத முறையில் தட்டி மோசமாக நடத்தியது தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
நவம்பர் 3ஆம் தேதி பாய
லேபாரில் உள்ள சிங்போஸ்ட் சென்டருக்குள் நுழைய தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 68 வயது முதியவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு இடைவெளித் தூதரை அவர் அவமதித்தார். அவரிடமும் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
பாதுகாப்பு இடைவெளித் தூதர்களைப் புண்படுத்தும் செயல்கள் கடுமையாகக் கருதப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. அரசாங்க ஊழியர்களை அச்சுறுத்தும், அவமதிக்கும், புண்படுத்தும் செயல்களில் ஈடு
படுவோருக்கு ஓராண்டு வரையிலான சிறைத் தண்டனையும் $5,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.

