சிங்கப்பூரின் உற்பத்தித் துறை தொடர்ந்து இரண்டாவது மாதமாக வளர்ச்சி கண்டுள்ளது. எல்லாத் துறைகளிலும் நிலையான வளர்ச்சியை காண முடிகிறது.
அக்டோபரில் திருத்தப்பட்ட 17 விழுக்காடு வளர்ச்சிக்குப் பிறகு ஓராண்டுக்கு முன்பு இருந்ததைவிட கடந்த மாத உற்பத்தி 14.6 விழுக்காடு அதிகரித்துள்ளதை பொருளியல் வளர்ச்சிக் கழகம் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
ஏற்ற இறக்கமாக இருக்கும் உயிர்மருத்துவத் துறை உற்பத்தி நீங்கலாக மற்ற துறைகளின் வளர்ச்சி மட்டும் கடந்த மாதம் 12.4 விழுக்காடாக இருந்தது.
சிங்கப்பூரின் முக்கிய துறைகளில் ஒன்றான மின்னணுவியல் துறை ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் நவம்பரில் 10.2 விழுக்காடு வளர்ச்சி கண்டது. அக்டோபரில் இருந்த 6.7 விழுக்காடு வளர்ச்சியிலிருந்து இது அதிகரித்துள்ளது.
ஏற்றுமதிக்கான ேதவை வலுவாக இருந்ததால் எல்லாத் துறை களிலும் வளர்ச்சி அதிகரித்துள்ளது.
மின்னணுவியல் உற்பத்தி இவ்வாண்டின் முதல் 11 மாதங்களில் கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத் துடன் ஒப்பிடுகையில் 16.5 விழுக்காடு வளர்ச்சியடைந்தது.
போக்குவரத்து பொறியியல் துறை 31.2 விழுக்காடு விரிவடைந்தது.
விமானத் துறை, கொவிட்-19 காரணமாக விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும் பராமரிப்பு, பழுதுபார்ப்பு போன்றவற்றுக்கான தேவை அதிகமிருந்ததால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 47.1 விழுக்காடு வளர்ச்சி கண்டது.
கடல்துறை மற்றும் கடல் சார்ந்த பொறியியல் துறையும் 34 விழுக்காடு வளர்ச்சி அதிகரித்தது. கப்பல் கட்டுமானம், பழுதுபார்ப்பு போன்ற பணிகளால் கடல்துறையில் இந்த வளர்ச்சியை காண முடி கிறது. ஒட்டுமொத்தமாக பார்க்கையில் போக்குவரத்து பொறியியல் துறை ஜனவரி முதல் நவம்பர் வரையில் 10.7 விழுக்காடு வளர்ச்சி பெற்றது. இந்த நிலையில் உயிர் மருத்துவ துறையின் வளர்ச்சி சற்று மெது வடைந்துள்ளது.
கடந்த மாதம் 56.8 விழுக்காடாக இருந்த அத்துறையின் வளர்ச்சி கடந்த மாதம் 20.1 விழுக்காட்டுக்குச் சரிந்தது. ஆனால் மருந்து உற்பத்தி 31.2 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

