தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான ‘போலிஸ் பால்’ திட்டம் தொடங்கியது

காவல்துறையின் பணிகளையும் குற்றச்செயல்களைத் தடுப்பதையும் வேடிக்கையான விளையாட்டுகள் மூலம் மாணவர்களுக்கு விளக்கும் திட்டம்.

முன்­னோ­டித் திட்­ட­மாக, கான் எங் செங் தொடக்­கப்­பள்­ளி­யில் அறி­மு­க­ப்படுத்தப்பட்ட 'போலிஸ் பால்' திட்­டத்­துக்கு நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது.

இவ்­வாண்டு தொடக்­கத்­தி­லி­ருந்து செப்­டம்­பர் வரை­யில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட திட்­டத்­தில் அப்­பள்­ளி­யின் மாண­வர்­கள் ஆர்­வத்­து­டன் பங்­கேற்றனர்.

காவல்­து­றை­யின் பணி­க­ளை­யும் குற்­றச்­செ­யல்­கள் நடக்­கா­மல் தடுப்­ ப­தை­யும் இந்­தத் திட்­டம் வேடிக்­கை­யான முறை­யில் போதிக்­கிறது.

"இந்­தத் திட்­டத்­தில் பங்­கேற்­காத மாண­வர்­களும் இது பற்றி கேட்­டுத் தெரிந்­து­கொள்ள விரும்­பி­னர்," என்று கான் எங் செங் தொடக்­கப் பள்­ளி­யின் ஆங்­கி­லம் மற்­றும் கணித ஆசி­ரி­ய­ரான கே. கண்­ண­தா­சன், 61 தெரி­வித்­தார்.

"சில வகுப்பு மாண­வர்­கள் மட்­டுமே ஈடு­ப­டுத்­தப்­பட்­ட­தால் மற்ற மாண­வர்­கள் தாங்­கள் ஏன் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­ட­வில்லை என்று வியப்­ ப­டைந்­த­னர். அதே சம­யத்­தில் திட்­டத்­தில் பங்­கேற்ற மாண­வர்­களும் விரும்பி செயல்­பட்­ட­னர்," என்­றார் அவர்.

சிங்­கப்­பூர் விளை­யாட்டு மையத்­தில் 'போலிஸ் பால்' திட்­டம் நேற்று முன்தினம் காவல்­து­றை­யி­ன­ரால் அதி­கா­ர­பூர்­வ­மாக தொடங்கி வைக்கப்பட்­டது.

இந்­நி­கழ்ச்­சி­யில் உள்­துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்­சர் டாக்­டர் முகம்­மது ஃபைசால் இப்­ரா­ஹிம் கலந்­து­கொண்­டார்.

காவல்­துறை உதவி ஆணை­யர் ஷிங் யூன் சின், கல்வி அமைச்­சின் குண­ந­லன், குடி­யு­ரிமை கல்­விக் கிளை­யின் இயக்­கு­நர் லோ வீ செங் ஆகி­யோ­ரும் இதில் பங்­கேற்­ற­னர்.

'போலிஸ் பால்' திட்­டத்­தில் பங்­கேற்க விரும்­பும் பள்­ளி­கள் அரு­கில் உள்ள அக்­கம்­பக்க போலிஸ் நிலை­யத்­தின் காவல்­துறை சமூக அதி­கா­ரி­க­ளு­டன் தொடர்பு கொள்­ள­லாம். இதற்கு கட்­ட­ணம் எது­வும் இல்லை.

இந்­தத் திட்­டம், மூன்று நிலை­ க­ளைக் கொண்­டது. வெவ்­வேறு கருப்­பொ­ரு­ளைக் கொண்ட புத்­த­கத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள நட­வ­டிக்­கை­களைப் பூர்த்தி செய்து அடுத்த நிலைக்கு மாண­வர்­கள் முன்­னேற வேண்­டும்.

முதல் நிலை­யில் காவல்­து­றை­யி­னரை மாண­வர்­க­ளுக்கு அறி­ மு­கப்­ப­டுத்­து­கிறது. படம் வரைந்து, வண்­ணம் தீட்டி தாளி­லான வடி­வத்தை இதில் பூர்த்தி செய்ய வேண்­டும்.

இரண்­டா­வது நிலை, சமூ­கத்­தின் பாது­காப்பை உறுதி செய்­யும் காவல்­து­றை­யின் செயல்­பாட்டை விவ­ரிக்­கிறது.

வார்த்­தை­களை தேடிக் கண்­டு­பி­டித்­தல், விளம்­ப­ரத் தட்டிகளை வடி­வ­மைத்­தல், கதை­யைப் படித்து வினாக்­ க­ளுக்­குப் பதி­ல­ளித்­தல் போன்ற நட­வ­டிக்­கை­களில் மாண­வர்­கள் ஈடு­பட வேண்­டும். 3வது நிலை, காவல்­து­றை­யி­னர் சட்­டம், ஒழுங்கை எவ்­வாறு நிலை­நாட்­டு­கின்­ற­னர் என்­பதை போதிக்­கிறது.

குறுக்­கெ­ழுத்து, சொல் தேடல் போன்ற நட­ வ­டிக்­கை­களின் மூலம் இது உணர்த்­தப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!