சிங்கப்பூரில் உள்ள கவிஞர்கள் மற்றும் கவிதை ஆர்வலர்களுடன் கவிமாலை ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை மாதாந் திரச் சந்திப்பினை நடத்தி வருகிறது.
அவ்வகையில் 259வது கவிமாலைச் சந்திப்பு இன்று மாலை மாலை 6:00 மணிக்கு 'ஸூம்' செயலி வழியாக நடைபெறவிருக்கிறது.
இம்மாதச் சந்திப்பில் திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் கவிஞர் இராசி அழகப்பன், 'படிப்பும் படைப்பும் பாடமும்' என்ற தலைப்பில் தனது அனுபவங்களையும், கவிதைகளின் தன்மையையும் பற்றியும் சிறப்புரையாற்றவுள்ளார்.
இந்நிகழ்வினை கவிஞர் இராம. நாச்சியப்பன் ஒருங்கிணைப்பு செய்ய கவிஞர்கள் பிடித்த, படித்த கவிதைகளை வாசித்தல், 'மின்னற் பொழுதின் தூரத்தில்' எனும் தலைப்பிலான இம்மாதப் போட்டிக் கவிதைகள் விமர்சனமும் இடம்பெறுகிறது.
மேலும் கவிஞர் இராசி.அழகப்பனுடன் கலந்துரையாடல் அங்கமும் உண்டு.
இணையம் வழி நடைபெற விருக்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.
(Zoom App ID: 238 635 9660, No need password).

