அங் மோ கியோ ஹப்பில் 55 வயது மதிக்கத்தக்க மாது ஒரு வரை தவறான முறையில் கை யாண்டதாகக் கூறப்படுவதை காவல்துறை மறுத்துள்ளது.
இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் காணொளிக்கு பதிலளிக்கும் வகையில் அவர்கள் நேற்று அறிக்கை ஒன்றை வெளி யிட்டனர். அதில் நடந்த சம்பவம் குறித்து விவரிக்கப்பட்டிருந்தது.
புதன்கிழமை காலை 9.19 மணியளவில் மாது ஒருவர் முகக்கவசம் அணிய மறுத்ததாக புகார் வந்ததால் காவல்துறையினர் அங்கு சென்றனர்.
பேரங்காடியில் ஊழியர் பலமுறை கூறியும் அந்த மாது முகக் கவசம் அணிய மறுத்ததாகக் கூறப்பட்டது. பேரங்காடியில் அவர் சத்தம் போட்டதாகவும் தெரிவிக்கப் பட்டது.
இதையடுத்து அங் மோ கியோ பேருந்து நிலையத்தில் அந்த மாதை அதிகாரிகள் அடையாளம் கண்டனர். அப்போது முகக்கவசம் அணிய அவரிடம் அறி வுறுத்தப்பட்டது. ஆனால் முகக்கவசம் அணிய மறுத்ததோடு அவருக்கு வழங்கப்பட்ட முகக் கவசகத்தையும் ஏற்றுக் கொள்ளவும் மறுத்துவிட்டார். உரக்கக் கத்தி பேசிய அவர் அங்கிருந்து செல்ல முயற்சி செய்தார்.
இதனால் அதிகாரிகள் அவரை சுமார் 15 நிமிடங்கள் தடுத்து நிறுத்தினர். தனக்கும் தன்னைச் சுற்றியிருந்தவர்களுக்கும் முகக் கவசம் அணியாமல் ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருந்ததால் அவரை கைது செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர்.
ஆனால் இதற்குப் பணியாமல் எதிர்ப்பு தெரிவித்த மாது, உட்கார விரும்பினார். அதற்கும் அதி காரிகள் அனுமதியளித்தனர் என்று அறிக்கையில் சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது.
அந்த மாது பின்னர் மனநலக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டார்.
இன்ஸ்டகிராமில் வெளியான காணொளியில் காவல்துறை அதிகாரிகள் நால்வர் சுற்றியிருந்த போது யாராவது உதவுங்கள் என்று அந்த மாது சத்தம் போடு வதும் நாங்கள் உதவ இருக்கிறோம் என்று ஒருவர் கூறுவதும் பதிவாகி யுள்ளது.
இந்தக் காணொளி அங் மோ கியோ பேருந்து நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொய்யானத் தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரித்து உள்ளனர்

