ஓசிபிசி வங்கி அனுப்புவது போன்ற மோசடி குறுந்தகவல்கள் அனுப்பப் படுவதால் வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி ஓசிபிசி வங்கி கேட்டுக் கொண்டது.
இத்தகைய மோசடியில் சிக்கிய 26 வாடிக்கையாளர்கள் டிசம்பர் 8 முதல் 17 வரையில் பத்து நாள்களில் 140,000 வெள்ளியை இழந்துள்ளனர்.
"டிசம்பரில் மட்டும் இதுவரை 45 போலி இணையத் தளங்கள் அடையாளம் காணப்பட்டு அகற்றப் பட்டுள்ளன. இது ஒவ்வொரு மாதமும் அகற்றப்படும் போலி இணையத் தளங்களில் எட்டு விழுக்காடு அதிகமாகும்," என்று ஓசிபிசி வங்கி தெரிவித்தது.
வங்கிக் கணக்கு அல்லது கடன் அட்டையில் பிரச்சினை இருப்பதாகக் கூறி மோசடி குறுந்தகவல்கள் அனுப்பப்படுவதாக அந்த வங்கி கூறியது.
போலி குறுந்தகவலில் மோசடி இணையத்தளத்துக்கு இட்டுச் செல்லும் தொடர்பு இடம்பெற்றுள்ளது.
ஓசிபிசி வங்கியைப் போன்று உள்ள அந்தப் ேபாலி இணையத்தளத்தில் வங்கிக் கணக்கின் முக்கிய விவரங்கள், மறைச் சொற்கள் கேட்கப்படுவதாக ஓசிபிசி வங்கி தெரிவித்தது.
"வங்கிக் கணக்கு மூடப்படு வதாகவோ அல்லது முடக்கப்படு வதாகவோ கூறி ஒரு போதும் இதுபோன்ற குறுந்தகவல்களையும் வங்கிக் கணக்கை மீண்டும் செயல் படுத்துவதற்கான தொடர்புகளையும் ஓசிபிசி அனுப்புவதில்லை.
"இதுேபான்ற விவகாரங்களில் மோசடிகளைத் தவிர்க்க நேரடி கடிதம் மூலமாகத்தான் ஓசிபிசி தொடர்புகொள்கிறது," என்று அந்த வங்கி விளக்கியது.
இதற்கிடையே அண்மைய மோசடி சம்பவங்களில் பணத்தை இழந்த வாடிக்கையாளர்களுக்கு உதவ காவல்துறை விசாரணையில் உதவி வருவதாக ஓசிபிசி தெரி வித்தது.
இதுபோன்ற மோசடிகளைத் தடுக்கும் முயற்சிகளை எடுத்து வருவதாகவும் அது கூறியது.
ஆனால் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்த பிறகு அதனை மீட்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அதன் வாடிக்கை யாளர்களை ஓசிபிசி வங்கி வலி யுறுத்தியுள்ளது.

