பூவிழி குறுநகையுடன் இனிக்கும் கிறிஸ்மஸ்

பூவிழி குறுநகையுடன் இனிக்கும் கிறிஸ்மஸ்

4 mins read
54b7e78b-6226-47e9-95ac-ad160495234b
மகள் பெத்தனியுடன் பெற்றோர் நீல் ஜேசன், ரேச்சல் சாமுவேல். படங்கள்: திமத்தி டேவிட் -
multi-img1 of 2

திமத்தி டேவிட் சக்தி மேகனா

நீல் ஜேசன் குடும்­பத்­திற்கு மன­நிறைவு அளிக்­கும் ஒரு கொண்­டாட்­ட­மாக இவ்­வாண்டு கிறிஸ்­மஸ் அமைந்­துள்­ளது. தங்­க­ளின் பாதை­யில் இடை­யிட்ட பல சவால்­களை நீல் ஜேசன், ரேச்­சல் சாமு­வேல் தம்­பதி கடந்து வந்­த­தும் இல்­லா­மல் இன்று அழ­கான ஐந்து மாதப் பெண் குழந்தை ஒன்­றும் அவர்­களின் கைகளில் தவழ்­கிறது.

கப்­பல் துறை­யில் அதி­கா­ரி­யாகப் பணி­யாற்­றும் 44 வயது நீல் ஜேசன், என்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அமைப்­பின் உதவி மேம்­பாட்டு பங்­கா­ளி­யா­கப் பொறுப்பு வகிக்­கும் 36 வயது ரேச்­சல் இரு­வ­ருக்­கும் திரு­ம­ண­மாகி மூன்று ஆண்­டு­கள் ஆகி­யும் குழந்தை இல்லை என்ற ஏக்­கம் இருந்­தது.

ஓர் இன்ப அதிர்ச்சி

கடந்த ஆண்டு அவர்­கள் முக்­கி­ய­மான ஒரு முடிவை எடுத்­த­னர். மருத்­து­வரை நாடி 'ஐவி­எஃப்' எனப்­படும் செயற்கை முறை­யில் கருத்­தரிக்­கும் முயற்­சிக்கு அவர்­கள் தயா­ரா­னார்­கள்.

அதற்­குத் தேவை­யான சிகிச்­சை­யை­யும் செய்­து­கொள்ள அவர்­கள் ஏற்­பாடு செய்­யத் தொடங்­கி­னர். ஆனால் சிகிச்­சை­யைத் தொடங்­கு­வ­தற்கு முன்­னரே இவ்­வாண்டு ஜன­வ­ரி­யில் அவர்­க­ளுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்­தி­ருந்­தது.

ரேச்­சல் சுய­ப­ரி­சோ­த­னைக் கருவி வழி சோதித்­துப் பார்த்­த­போது தாம் கரு­வுற்­றி­ருப்­பதை அறிந்­தார். பரி­சோ­தனை முடிவு சரி­தானா என்று கண­வ­ரை­யும் அரு­கில் அழைத்­துப் பார்க்­கச் சொன்­னார். அன்று இரு­வ­ரும் ஆனந்­தக் கண்­ணீர் வடித்து இறு­கக் கட்­டி­ய­ணைத்­துக்­கொண்ட இன்­ப­மான தரு­ணத்தை நினை­வு­கூர்ந்­த­னர் அத்­தம்­ப­தி­யர்.

செயற்கை முறை­யில் குழந்­தை­யைப் பெற்­றெ­டுக்க மன­த­ள­வில் தயா­ரா­ன­வர்­க­ளுக்கு இயற்­கை­யாகவே குழந்­தைப்­பேறு கிடைத்­ததை இறை­வன் தந்த வர­மாக எண்ணி மகிழ்ச்சி அடைந்­த­னர்.

29 வாரங்­களில் பிர­ச­வம்

இருப்­பி­னும், அவர்­க­ளுக்கு அடுத்த சோதனை காத்­தி­ருந்­தது.

அவர்­க­ளின் மகள் 29 வாரங்­களில் குறைப்­பி­ர­ச­வத்­தில் பிறந்­தாள்.

திடீ­ரென ஒரு­நாள் ரேச்­ச­லின் நீர்ப்பை கசி­யத் தொடங்­கி­யது. பத்து நாள்­க­ளுக்கு ரேச்­சல் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற வேண்­டி­யி­ருந்­தது.

தமது முழு­நேர வேலை­யில் இருந்து இன்­னும் விடுப்பு எடுக்­கா­தது ஒரு புறம் இருக்க, தமது பணி­களை முறையே சக ஊழி­யர்­க­ளி­டம் அவர் இன்­னும் ஒப்­படைக்­க­வும் இல்லை. மருத்­து­வ­மனை­யில் இருந்­த­வாறு ரேச்­சல் தமது பணி­க­ளைச் செய்­தார்.

இதற்­கி­டையே, தங்­க­ளின் புதிய இல்­லத்­தில் அவர்­கள் குடி­யே­றிக் கொண்­டி­ருந்­தார்­கள். புக்­கிட் பாஞ்­சாங் வட்­டா­ரத்­தில் இரண்டு மாடி­யு­டைய வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கத்­தின் 'மேஷ­னட்' வீட்டை மறு­விற்­ப­னைச் சந்­தை­யில் வாங்கி அதைப் புதுப்­பித்­தி­ருந்­தார்­கள்.

குழந்தை பிறக்க இன்­னும் நாள் உள்­ளது என்று தேவை­யான எந்த பொரு­ளை­யும் வாங்­காத நிலை வேறு. இப்­படி திடீ­ரென ஏற்­பட்ட நீர்ப்­பைக் கசிவு, குழந்­தைப் பிர­ச­வத்­தில் முடி­யும் என்று அவர்­கள் சற்­றும் எதிர்­பார்க்­க­வில்லை.

மருத்­து­வர்­கள் முடிந்­த­வரை கர்ப்­பப் பையி­லேயே குழந்­தையை வைத்­தி­ருக்க முயற்சி செய்­த­னர். ஆனால் எப்­ப­டியோ சுகப் பிர­ச­வத்­தில் பிறந்­தாள் பெத்­தனி ஜெனல் ஜேசன். இருப்­பி­னும் பிறந்த உட­னேயே தாயி­ட­மி­ருந்து பெத்­தனி பிரிக்­கப்­பட்­டாள்.

பெத்­தனி 29 வாரம் மட்­டுமே தாயின் கரு­வ­றை­யில் இருந்­த­தால் இன்­னும் மூன்று மாதப் பிர­ச­வக் காலத்­திற்கு ஈடு­கட்ட பல வாரங்­களாக மருத்­து­வ­மனை­யில் இருக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. ரேச்­ச­லின் அர­வ­ணைப்பு அறி­யா­ம­லேயே மூன்று வாரங்­கள் கடந்­தன.

மூன்று வார வேதனை

ஆனா­லும் புதி­தாகப் பெற்­றோர் ஆகிய நீல் ஜேசன், ரேச்­சல் தின­மும் மருத்­து­வ­ம­னைக்­குச் சென்று பெத்­த­னி­யைப் பார்த்து வந்­த­னர்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுச் சூழல் என்­ப­தால் அவர்­கள் தின­மும் பரி­சோ­தனை மேற்­கொண்­டு­தான் செல்ல முடி­யும் என்ற கட்­டுப்­பா­டும் இருந்து வந்­தது.

கண்­ணாடி அறைக்­குள் சிறிய 'இன்­கு­பேட்­டர்' பெட்­டிக்­குள் உள்­ளங்கை அள­வில் இருந்த தங்­களின் குழந்தை, பல்­வேறு குழாய்­கள் பொருத்­தப்­பட்­டி­ருந்த காட்­சியை மறக்­கவே முடி­யாது என்­றார் அந்­தத் தாய். பிரார்த்­தனை செய்து கனத்த நெஞ்­சத்­து­டன் கண்­ணில் நீரு­டன் வீடு திரும்­பிய நாள்­களை அவர்­கள் வரு­ணித்­த­னர்.

மூன்று வாரங்­கள் கழித்து தாதி­ய­ரின் உத­வி­யு­டன் முதன்­மு­த­லில் தம்­மு­டைய மகளை நெஞ்­சில் சுமக்க ரேச்­ச­லுக்கு வாய்ப்பு கிடைத்­தது. நாளுக்கு ஒரு மணி நேரம் அவ்­வாறு தூக்­கிக்­கொண்­ட­பின் மீண்­டும் குழந்­தை­யைத் தாதி­யர் தூக்­கிச் சென்­று­வி­டு­வார்.

குழந்தை பிறந்த பிற­கும் மற்ற பெற்­றோ­ரைப் போல் அதை வீட்­டுக்­குக் கொண்ட செல்ல முடி­யா­மல் வெறுங்­கை­யாக திரும்­பி­யது தம்­மைப் பெரி­தும் வருத்­தி­ய­தாக ரேச்­சல் பகிர்ந்­து­கொண்­டார்.

இனி எல்­லாம் சுகமே

திரு­ம­ண­மாகி நான்கு ஆண்டு நிறை­வைத் தம்­ப­தி­யர் கொண்­டாடு­வ­தற்கு இரு தினங்­கள் முன்­ன­தாக மருத்­து­வ­ம­னை­யி­லி­ருந்து வீட்­டிற்கு முதல்­மு­றை­யாக வந்­தார் மகள் பெத்­தனி.

புது வீட்­டிற்கு வந்த அந்­தச் செல்­லக் குழந்­தையே நீல் ஜேசன், ரேச்­சல் தம்­ப­திக்கு இவ்­வாண்டு கிறிஸ்­மஸ் பண்­டி­கை­யின் முக்­கிய அம்­ச­மா­னாள்.

அடுத்­த­டுத்து வந்த சவால்­களைச் சமா­ளித்து, இந்த கிறிஸ்­ம­சுக்­குத் தங்­க­ளின் புதிய இல்­லத்­தில் அழ­கான கிறிஸ்­மஸ் மரம் ஒன்­றைத் தம்­ப­தி­யர் வைத்­துள்­ள­னர்.

தங்­க­ளின் மக­ளுக்­காக நிறைய பரி­சுப்­பொ­ருள்­க­ளை­யும் அந்த மரத்­தின் கீழ் வைத்­துள்­ள­னர்.

இவ்­வாண்டு கிறிஸ்­மஸ் பண்­டி­கை­யைப் போல் இனி­வ­ரும் அனைத்து கிறிஸ்­மஸ் தினங்­களும் நம்­பிக்கை அளிப்­ப­தாக அமை­யும் என்று இறை­வ­னுக்கு நன்றி கூறி கொண்­டா­டும் இத்­தம்­ப­திக்கு நமது வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றோம்.