கொண்டாட்ட உணர்வுடன் இறையன்பு, சமூகப்பணி

கொண்டாட்ட உணர்வுடன் இறையன்பு, சமூகப்பணி

2 mins read
d0423b6f-21d3-4b91-8ee3-74a5e698393b
-

கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வல் சூழ­லில் கிறிஸ்­­மஸ், இரண்­டா­வது ஆண்­டாக சிங்­கப்­பூர் தமி­ழர்­கள் பரா­மரிக்­கும் திருச்­ச­பை­களில் சமய உணர்­வும் சமூக உணர்­வும் கட்­டிக் காக்­கப்­பட்டு கொண்­டா­டப்­ப­டு­கிறது.

கிறிஸ்­மஸ் கொண்­டாட்­டங்­களில் கூட்­டம் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டா­லும் அதில் புதி­ய­வர்­க­ளைச் சேர்ப்­ப­தற்­கான இடங்­களை ஒதுக்க முடிந்­த­தில் அங் மோ கியோ தமிழ் மெத்­த­டிஸ்ட் தேவா­ல­யத்­தின் போத­கர் ஆர் பிரபு, 68, தமிழ் முர­சி­டம் தெரி­வித்­தார்.

"கடந்த வாரத்­தின்­போது நாங்­கள் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தங்கு­வி­டு­தி­க­ளுக்­கும் எங்­கள் திருச்­சபை­யைச் சேர்ந்த வச­தி­கு­றைந்­தோ­ரின் வீடு­க­ளுக்­கும் சென்று பொரு­ளு­தவி செய்­தோம்.

"செங்­காங் சமூக மருத்­து­வ­மனை­யில் உள்ள ஊழி­யர்­க­ளுக்கு நாங்­கள் நன்றி கூறி அவர்­க­ளுக்கு உண­வுப் பொட்­ட­லங்­களை வழங்கி­னோம். சிர­மத்­தில் இருக்­கும் பணிப்­பெண்­க­ளுக்­கும் பற்­றுச்­சீட்­டு­கள் வழங்­கப்­பட்­டன," என்று திரு பிரபு தெரி­வித்­தார்.

தன்­மு­னைப்­புப் பேச்­சு­களும் விளை­யாட்­டு­களும் இடம்­பெற்ற மெய்­நி­கர் நிகழ்ச்சி ஒன்­றுக்­குக் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று ஆல­யம் ஏற்­பாடு செய்­தி­ருந்­த­தா­க­வும் கடந்த 22 ஆண்­டு­க­ளா­கப் போத­க­ரா­கப் பணி­யாற்­றி­வ­ரும் திரு பிரபு குறிப்­பிட்­டார்.

கிறிஸ்­மஸ் தின காலை­யன்று இவ்­வாண்டு தடுப்­பூசி போடப்­பட்டுள்ள 200 பேர் வரை தேவா­ல­யத்­திற்கு நேரில் வரு­வ­தற்கு அனு­மதி இருப்­ப­தாக திரு பிரபு கூறி­னார். அனை­வ­ரும் ஒன்­று­கூடி சாப்­பிட முடி­ய­வில்லை என்ற ஏக்­கம் சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு இருந்­தா­லும் பிற­ருக்கு உணவு வழங்­கும் சேவை நிறைவு அளிப்­ப­தாக அவர் கூறி­னார்.

இவ்­வாண்டு கட்­டுப்­பா­டு­கள் தொடர்ந்து நில­வி­னா­லும் அதனை ஏற்­கும் பக்­கு­வம் பல­ருக்கு ஏற்­பட்­டி­ருப்­ப­தால் இம்­முறை கொண்­டாட்­டங்­கள் உற்­சா­கத்­து­டன் தொடங்­கி­ய­தாக செயிண்ட் ஆண்ட்­ரூஸ் பேரா­ல­யத்­தின் போத­கர் ஜோஷுவா ராஜ், 53, தெரி­வித்­தார்.

"இறை­யன்­பா­லும் சபை உறுப்­பி­னர்­கள் மீதான அதீத அக்­க­றை­யா­லும் தேவா­ல­யத்­தைச் சேர்ந்­த­வர்­கள், புத்­தாக்க முறை­க­ளைக் கையாண்டு இணை­யச் செய­லி­களின் மூலம் மக்­க­ளைப் பிரார்த்­தனை நிகழ்­வு­களில் ஈடு­ப­டுத்­தி­னர்," என்று திரு ஜோஷுவா கூறி­னார்.

இந்த கிறிஸ்­மஸ் தினத்தை முன்­னிட்டு புக்­கிட் மேரா வட்­டாரத்­தில் உள்ள வாடகை வீட்­டு­வாசி­களுக்­குத் தேவா­லய உறுப்­பினர்­கள் உத­வி­யும் உள்­ள­தாக திரு ஜோஷுவா தெரி­வித்­தார்.

வீட்­டுக்­குத் தேவை­யான பொருள்­களை உறுப்­பி­னர்­கள் நன்­கொடை அளித்து, அவற்­றைப் பொட்­ட­லங்­கட்டி வீடு­க­ளுக்கு விநி­யோ­க­மும் செய்­த­னர் என்­றார்.

கிறிஸ்­மஸ் தினத்­தன்று 500 பேர் நேர­டி­யா­க­வும் 1,000 பேர் மெய்­நி­கர் வழி­யா­க­வும் பங்­கேற்­ப­தாக அவர் கூறி­னார்.

"தேவா­லய வளா­கம் மூன்று பிரி­வு­க­ளா­கப் பிரிக்­கப்­ப­டு­கின்­றன. பாது­காப்பு இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டித்­த­வாறு மக்­கள் தங்­களது பிரார்த்­த­னை­களை நிறை­வேற்­றிக்­கொள்­ளும் வசதி உள்­ளது," என்று அவர் கூறி­னார்.

செய்தி: கி.ஜனார்த்­த­னன், திமத்தி டேவிட்