கைக்குழந்தைப் பராமரிப்பு தேவை 66% அதிகரிப்பு

கைக்குழந்தைப் பராமரிப்பு தேவை 66% அதிகரிப்பு

2 mins read
f178676b-c0d8-4695-b3b0-a481f0c3734d
-

சிங்­கப்­பூ­ரில் கைக்­கு­ழந்தைப் பரா­ம­ரிப்­புக்­குத் தேவை அதி­க­ரித்­துள்­ளது. பிறந்து இரண்டு முதல் 17 மாதம் வரை ஆகும் குழந்­தை­களைக் கவ­னித்­துக்கொள்­வ­தற்­கான தேவை கடந்த ஐந்தாண்டு ­களில் 66% கூடி இருக்­கிறது.

குறிப்­பாக பொங்­கோல், செங்­காங்­கில் கைக்­கு­ழந்தை மற்­றும் சிறார் பரா­ம­ரிப்பு நிலை­யங்களுக்­கான தேவை 90% அதி­க­மாகி இருக்­கிறது என்று பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பின் பேச்சாளர் ஒரு­வர் தெரி­வித்­த­தாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்­பிட்­டு உள்­ளது.

இந்த அமைப்பு, 2023ஆம் ஆண்டுவாக்­கில் மேலும் 10,000 புதிய முழுநேர பாலர்பள்ளி இடங்­களை உரு­வாக்­கும் என்று எதிர்பார்க்­கப்­ப­டு­கிறது.

பெரும்­பா­லும் அந்த இடங்­கள், இளம் தம்­ப­தி­யர் அதி­கம் வசிக்­கும் பகு­தி­களில் அமை­யும்.

மக்­கள் செயல் கட்சி சமூக அற­நிறு­வனம் நடத்­தும் 268 முழு­நேர சிறார் பரா­ம­ரிப்பு நிலை­யங்­களில் 177ல் கைக்­கு­ழந்­தைப் பரா­ம­ரிப்­புச் சேவை கிடைக்­கிறது.

அங்கு கைக்­கு­ழந்­தை­க­ளுக்கு ஏற்ற பாடத்­திட்­ட­மும் நடப்­பில் இருக்­கிறது. திரு­வாட்டி ஜோதி லட்­சுமி ராம­கி­ருஷ்­ணன், 40, என்ப ­வ­ருக்கு கடந்த ஜன­வரி மாதம் பெண் குழந்­தை பிறந்­தது.

அவர் பிர­ச­வத்­திற்கு முன்பே தன் குழந்­தைக்கு, கைக்­கு­ழந்­தைப் பரா­ம­ரிப்பு நிலைய சேவை வேண்டு­மென்று முடிவு செய்து பொங்­கோ­லில் தன் வீட்­டிற்கு அருகே இருக்­கும் இ-பிரிட்ஜ் பாலர்­பள்ளி நிலை­யத்­து­டன் விடாது தொடர்பு­கொண்டுவந்­தார்.

இட­மில்லை என்ற பதிலே அவருக்குக் கிடைத்­தது. அந்த மாதின் பெயர் அந்நிலை­யத்­திற்கு மனப்­பா­ட­மா­கவே ஆகி­விட்­டது.

கடை­சி­யாக மே மாதம் அந்த நிலை­யத்­தில் இருந்து திரு­வாட்டி ஜோதிலட்­சு­மிக்கு தக­வல் வந்­தது.

உட­ன­டி­யாக விரைந்த அவர், அந்த நிலை­யத்­தில் தன்­னு­டைய நான்கு மாத குழந்தை தியா ஜெலினுக்கு இடத்­தைப் பெற்­றார்.

மனி­தவ­ளத் துறை நிர்­வா­கி­யா­கப் பணி­யாற்­றும் திரு­வாட்டி ஜோதிலட்­சுமி இந்த விவ­ரங்­களை தெரி­வித்­தார்.

கைக்­கு­ழந்­தைப் பரா­ம­ரிப்­புச் சேவையை நாடும் இவரைப் போன்ற பெற்­றோரின் எண்­ணிக்கை அதி­க­ரித்து உள்­ளது.