மரத்தின் மீது பேருந்து மோதியதில் அறுவர் காயம்

மரத்தின் மீது பேருந்து மோதியதில் அறுவர் காயம்

1 mins read
d7b82f16-dec5-4db9-aba1-2f0749ca36e8
தெம்­ப­னிஸ் விரை­வுச்சாலை­யில் இருந்து ஒரு துணைச்­சாலை வழியாக காலாங்-பாய லேபார் விரை­வுச்­சா­லையை நோக்­கிச் சென்­ற­போது பேருந்து மரத்­தில் மோதி­விட்­ட­து. படம்: SG ROAD VIGILANTE -

எஸ்­பி­எஸ் டிரான்சிட் பேருந்து ஒரு மரத்­தில் மோதி­ய­தில் ஆறு பேர் காயம் அடைந்­த­னர்.

இந்த விபத்து கிறிஸ்­மஸ் நாளன்று நிகழ்ந்­தது.

அந்­தப் பேருந்து, முற்­ப­கல் சுமார் 11 மணிக்கு தெம்­ப­னிஸ் விரை­வுச்சாலை­யில் இருந்து ஒரு துணைச்­சாலை வழியாக காலாங்- பாய லேபார் விரை­வுச்­சா­லையை நோக்­கிச் சென்­ற­போது மரத்­தில் மோதி­விட்­ட­தாக சிங்­கப்­பூர் குடிமைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.

தன் இருக்­கை­யில் சிக்­கிக் கொண்டு இருந்த பேருந்து ஓட்டுநர் மீட்­கப்­பட்டு மருத்­து­வ­மனைக்குக் கொண்­டு­செல்­லப்­பட்­டார். காயம் அடைந்த மற்­ற­வர்­களும் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­னர்.

இத­னி­டையே, இது பற்றி தெரிவித்த எஸ்­பி­எஸ் டிரான்சிட் நிறு­வ­னம், காயம் அடைந்த ஐந்து பயணிகளுக்கும் தன்­னால் ஆன அனைத்து உத­வி­க­ளை­யும் தான் செய்­து­வ­ரு­வ­தா­கக் கூறி­யது.

இந்த விபத்து குறித்து காவல் துறையின் வி­சா­ரணை நடப்­ப­தா­க­வும் சம்­பந்­தப்­பட்ட பேருந்து ஓட்டு­நர் பணி­யில் இருந்து தற்­கா­லி­க­மாக நீக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் எஸ்­பி­எஸ் டிரான்சிட் நிறு­வன பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.