'கோல்டு ஸ்டோரேஜ்' நிறுவனம், முன்களப் பணியாளர்கள் ஆற்றும் அரிய சேவைகளை அங்கீகரித்து பாராட்டும் வகையில் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள், பேருந்து ஓட்டுநர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 12 முன்களப் பணியாளர்களுக்கு கிறிஸ்மஸ் விருந்து அளித்து சிறப்பித்தது.
அத்தகைய ஊழியர்களை தன் இணையத் தளம் வழி நவம்பர் 22ஆம் தேதி முதல் டிசம்பர் 14ஆம் தேதி வரை பரிந்துரைக்கும்படி அந்த நிறுவனம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது. ஏறத்தாழ 50 பரிந்துரைகள் வந்தன.
அவர்களில் 12 பேரைத் தேர்ந்து எடுத்து டிசம்பர் 20ஆம் தேதி முதல் டிசம்பர் 25ஆம் தேதிவரை உணவு விநியோகித்து கோல்டு ஸ்டோரேஜ் நிறுவனம் அவர்களைச் சிறப்பித்தது.

