பிள்ளைகளிடம் மன வளர்ச்சி, மனத்திறன், நினைவாற்றல், உணர்ந்தறிதல் முதலானவற்றின் வளர்ச்சியை ஆராய்வதற்காக ஒரு புதிய ஆய்வு நடத்தப்படு கிறது.
முதல் நான்கு ஆண்டுகளில் பிள்ளைகளிடம் காணப்படும் மன வளர்ச்சியை ஆய்வு கண்டறியும் என்று தெரிவிக்கப்பட்டது.
பள்ளிக்கூடங்களில் படிப்பில் வெற்றிபெறத் தேவைப்படும் தேர்ச்சிகள், ஆற்றல்கள் பிள்ளைகளிடம் எப்படி மேம்படுகின்றன என்பது ஆய்வு மூலம் தெரியவரும்.
காலப்போக்கில் அத்தகைய திறமைகள் எப்படி வளர்ச்சி அடைகின்றன;
தவழும் குழந்தைகளிடம், சிறாரிடம் அவை எப்படி மாறுபடு கின்றன என்பனவற்றை கண்டு பிடிப்பது அந்த ஆய்வின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டது.
கல்வி அமைச்சின் மானியத்துடன் அந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மானியம் சென்ற ஆண்டில் கொடுக்கப்பட்டது.
தேசிய கல்விக் கழகம், சிங்ஹெல்த் பலதுறை மருந்தகங்கள் இரண்டுக்கும் இடைப்பட்ட முதல் முயற்சியாக இடம்பெறும் அந்த ஆய்வில் ஏறக்குறைய 1,000 பிள்ளைகளை உள்ளடக்குவது இலக்கு என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆய்வுக்காக செப்டம்பர் முதல் குடும்பங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. இதுவரை 200 சிறார்பதிந்துகொண்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

