கையில் தூரிகை, மனதில் அமைதி

கி. ஜனார்த்­த­னன்

உணர்­வு­களை வெளிப்­ப­டுத்த முடி­யா­மல் தவிக்­கும் ஒரு­வ­ருக்கு வண்­ணம் தீட்­டு­வது இத­ம­ளிக்­கும் என்று அறி­வி­யல் கல்­வி­யா­ளர் ஷர்மின் தாஜ், 32, கூறு­கி­றார்.

சிங்­கப்­பூர் அறி­வி­யல் நிலை­யத்­தில் கற்­றல் நட­வ­டிக்­கை­க­ளைத் திட்­ட­மி­டு­வ­து­டன் வரு­கை­யா­ளர்­களை வர­வேற்­கும் பணி­யில் உள்­ளார் திரு­மதி ஷர்­மின்.

வாழ்க்­கை­யில் அனைத்­தை­யும் சரி­வ­ரச் செய்­ய­வேண்­டும் என்ற அழுத்­தத்­தால் கவ­லைக்கு உள்­ளாகி­ய­தாக ஷர்­மின் பகிர்ந்­து­கொண்­டார். இத­னால் பல நேரங்­களில் அவ­ரது கவ­னம் சித­றி­ய­து­டன் உடல் உபா­தை­களும் அவ­ருக்கு ஏற்­பட்­டன.

தமது குடும்­பப் பொறுப்­பு­க­ளுக்­கி­டையே நேரம் ஒதுக்கி உடற்­பயிற்­சிக் கூடத்­திற்­குச் சென்று உட­லைக் கட்­டாக வைத்­தி­ருக்­க­வும் முயற்சி செய்து வரு­கி­றார்.

இவ்­வாறு இருக்க ஒரு­நாள் தமது பிள்­ளைப் பருவ நாள்­களை ஷர்­மின் நினை­வு­கூர்ந்­தார். அந்­தக் கால­கட்­டத்­தில் தாம் வண்­ணம் தீட்­டிய நினை­வு­கள் திரு­மதி ஷர்மினுக்­குத் திரும்­பின.

பளிச்­சி­டும் வண்­ணங்­களை விரும்­பும் இந்த இளை­யர், 'ஹேப்பி கலர்' என்ற வண்­ணம் தீட்­டும் செய­லி­யைப் பயன்­ப­டுத்­தத் தொடங்­கி­னார். பிறகு வண்­ணச் சாயங்­களைப் பயன்­ப­டுத்தி காகி­தங்­களுக்கு வண்­ணம் தீட்­டி­னார்.

தமது புதிய பொழு­து­போக்கு குறித்து ஷர்­மின் எழு­திய கட்­டுரை ஒன்றை இவ்­வாண்டு அக்­டோ­பர் 16ஆம் தேதி­யன்று கல்வி அமைச்சு அதன் ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதிவு ஒன்றை வெளி­யிட்­டி­ருந்­தது.

அதில் 'மன­தில் பாரம் இருப்­பதை அதி­கம் உணர்­வோர், வண்­ணம் தீட்­டும்­போது மன­உ­ளைச்­சலைத் தற்­கா­லி­க­மாக மறக்­கச் செய்­யும் 'ஹார்­மோன்'கள் மூளை­யி­லி­ருந்து சுரக்­கின்­றன' என்று ஷர்­மின் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

ஓவி­யத்தை ஒரு பாட­மா­கக் கற்­பது வேறு, மன­ந­லம் காக்க அதைப் பயில்­வது வேறு என்­கின்­ற­னர் ஓவிய சிகிச்சை நிபு­ணர்­கள்.

எளி­தில் தெரி­விக்க இய­லாத உணர்­வு­களை, வெளிப்­ப­டுத்த வகை­செய்­யும் ஓவிய சிகிச்­சையை (Art therapy) மேற்­கொள்­வோ­ரி­டம் பதற்ற மன­நிலை காலப்­போக்­கில் குறை­வ­து­டன் சுய­வி­ழிப்­பு­ணர்­வும் அதி­க­ரிக்­கும் என்று அவர்­கள் கூறு­கின்­ற­னர்.

சிகிச்­சை­யின்­போது வரை­யப்­படும் ஓவி­யங்­க­ளின் வழி­யாக நமக்கே தெரி­யாத, ஆழ்­மன எண்­ணங்­க­ளை­யும் அறிந்­து­கொள்­ள­லாம் என்று கூறப்­ப­டு­கிறது.

"அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளின் இறப்பு, துயர சம்­ப­வத்­தால் ஏற்­படும் பாதிப்பு, உணவு தொடர்­பான மனக் கோளாறு­கள், தீய பழக்­கங்­க­ளுக்கு அடி­மை­யா­வது, காதல் தொடர்­பான பிரச்­சி­னை­கள் உள்­ளிட்­ட­வற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் இத­னைச் செய்­ய­லாம்.

"இது­போன்ற பிரச்­சி­னை­கள் இல்­லா­த­வர்­களும் தங்­க­ளது மன­நலம் மேம்­பட இதில் ஈடு­ப­ட­லாம்," என்று சிங்­கப்­பூர் மன­ந­லச் சங்­கத்­தைச் சேர்ந்த ஓவி­யக்­கலை சிகிச்சை நிபு­ணர் திரு மகேஷ் அய்­யர் தெரி­வித்­தார்.

தற்­போ­தைய கிரு­மிப்­ப­ர­வல் கால­கட்­டத்­தில் நேர­டி­யாக உரை­யா­டும் வாய்ப்­பு­கள் குறைந்­து­விட்­டன. இந்­தச் சூழ­லில் வண்­ணம் தீட்­டும் நட­வ­டிக்­கை­கள் ஏற்­றவை என்று 'இம்­பார்ட்' எனப்­படும் இளை­யர்­கள் மன­நல ஆர்­வ­லர் அமைப்­பின் திரு நர­சிம்­மன் திவா­சிக மணி தெரி­வித்­தார்.

"பிற­ரைப் பார்க்­கக்­கூ­டத் தயங்கு­ப­வர்­களும் தொடர்ந்து வண்­ணம் தீட்­டு­வ­தில் ஈடு­பட்ட பிறகு மெல்­லத் தங்­க­ளது உணர்­வு­களை வெளிப்­ப­டுத்­தத் தொடங்­கு­கின்­றனர்," என்று திரு நர­சிம்­மன் குறிப்­பிட்­டார்.

வண்­ணம் தீட்­டு­வ­தில் மன அமைதி அடை­ய­லாம் என்­பதை அனு­ப­வ­ரீ­தி­யாக உண­ரு­மாறு இந்­ந­ட­வ­டிக்­கையை ஷர்­மின் இளை­யர்­க­ளுக்­குப் பரிந்­துரை செய்­கி­றார்.

"நட­வ­டிக்கை ஒரு சில நிமி­ட­மாக இருக்­க­லாம், பல மணி­நே­ர­மும் நீடிக்­க­லாம். முயன்று பாருங்­கள்," என்­றார் இவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!