கல்விக்கு முன்னுரிமை, லட்சியத்துக்கு முக்கியத்துவம்

கல்விக்கு முன்னுரிமை, லட்சியத்துக்கு முக்கியத்துவம்

2 mins read
3a63977f-1434-4e18-8664-a08773c095e2
கல்வி உபகாரச் சம்பளத்துக்குப் பலமுறை தகுதிபெற்றுள்ள தஸ்னிம் (நடுவே நிற்கும் மாணவி) தம்முடைய குடும்பத்தாருடன். படம்: தஸ்னிம் நிலோபர் அக்பர் -

சக்தி மேகனா

தமது நீண்­ட­நாள் கனவை அடை­யும் பய­ணத்­தைத் தொடங்­கப் போகி­றோம் என்ற திருப்­தியை தஸ்­னிம் நிலோ­பர் அக்­பர் பெற்­றுள்­ளார். இவ்­வாண்­டின் வழக்க நிலைத் தேர்­வில், சிராங்­கூன் உயர்­நி­லைப் பள்­ளி­யைச் சேர்ந்த தஸ்­னிம், 5 புள்­ளி­கள் பெற்று தொழில்­நுட்­பக் கல்வி கழ­கத்­தில் தமக்­குப் பிடித்­த­மான 'பேக்­கிங், பேஸ்ட்ரி' படிப்­புக்­குத் தகுதி பெற்றுள்­ளார்.

"பேக்­கிங் படிக்­க­வேண்­டும் என்­பது எனது லட்­சி­யம். இது தொடர்­பான யூடி­யூப் காணொ­ளி­களை நான் நீண்ட கால­மாக பார்த்­தும் வரு­கி­றேன். எதிர்­காலத்­தில், வெளி­நா­டு­களில் பயிற்சி பெற்று எனது பேக்­கிங் திற­மையை வளர்த்­துக்­கொள்ள விரும்­பு­கிறேன். மேலும், எனக்­குப் பிடித்த 'டேஸ்ட்டி' நிறு­வ­னத்­தில் பணி­புரி­ய­வும் விரும்­பு­கி­றேன்," என்­றார் தஸ்­னிம். கொவிட்-19 சூழ­லால் வழக்க நிலைத் தேர்­வுக்­குத் தயார் செய்­வ­தில் தஸ்­னி­முக்­குப் பல சவால்­கள் ஏற்­பட்­டன.

"நான் பள்­ளி­யில் மாண­வர் தலை­வ­ராக இருக்­கி­றேன். அத்­து­டன் இந்த ஆண்டு நாடக இணைப்­பாட வகுப்­பி­லும் பங்­காற்­றி­ய­தால், சிங்­கப்­பூர் இளை­யர் விழா கொண்­டாட்­டத்­தில் பங்­கேற்று சாதனை சான்­றி­தழை வென்­றேன். கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­ப­டுத்­திய மாற்­றங்­களுக்­கி­டையே எனது பள்­ளிக் கட­மை­கள், இணைப்­பாட நட­வடிக்­கை­கள், தேர்­வு­கள் ஆகி­ய­வற்­றைச் சமா­ளிப்­பது சற்று சவா­லாக இருந்­தது," என்று கூறி­னார்.

"நான் என் கைப்­பே­சி­யைக் குறைந்­தது இரண்டு மணி நேர­மா­வது ஒரு புறம் வைத்­து­விட்டு பாடங்­களில் கவ­னம் செலுத்­து­வேன். படித்­த­பின் கைப்­பே­சி­யைச் சிறிது நேரத்­திற்­குப் பயன்­ப­டுத்­து­வேன். முக்­கி­ய­மான, முன்­னு­ரிமை பெறும் வேலை­களை முடித்த பின்­னரே நண்­பர்­க­ளு­டன் பேசு­வது அல்­லது விளை­யா­டு­வ­தற்கு கைப்­பே­சியை எடுப்­பேன்," என்று கூறி­னார்.

முன்­மா­திரி யார் என்று கேட்­ட­போது தஸ்­னிம் வித்­தி­யா­ச­மான பதிலை வைத்­தி­ருந்­தார்.

"ஜோடி ஸ்வீட்­டின் எனும் அமெ­ரிக்க நடிகை, தொலைக்­காட்சி பிர­ப­லமே எனது முன்­மா­திரி. போதைப்­பொ­ருள், மதுப்­ப­ழக்­கம் ஆகி­ய­வற்­றுக்கு அடி­மை­யாக இருந்­த­வர் அவற்­றி­லி­ருந்து மீண்டு­வந்து இன்று பொது­மக்­க­ளி­டையே விழிப்­பு­ணர்வு இயக்­கங்­கள் நடத்தி பிறர் வாழ்க்­கை­யில் மாற்­றங்­கள் ஏற்­ப­டுத்தி வரு­கி­றார்," என்று தஸ்­னிம் கூறி­னார்.

கல்வி உப­கா­ரச் சம்­ப­ளத்­தைப் பல­முறை பெற்­றுள்ள தஸ்­னிம், "மாண­வர்­கள் தங்­க­ளது லட்­சி­யம் என்­ன­வென்று கண்­ட­றிந்­தால் ஊக்­கத்­தை­யும் பெற்­று­வி­ட­லாம். மன ஆரோக்­கி­யத்­தைப் பேணும் அதே­வே­ளை­யில் கல்­வி­யைக் கைவிட்டு விடக்­கூ­டாது என்­பது மாண­வர்­க­ளுக்கு இவர் வழங்­கும் அனு­ப­வப் பரி­மா­றல்.