சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்துக் கட்டண உயர்வு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 26) நடப்புக்கு வந்தது. கட்டணம் உயர்த்தப்படும் என்று கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது.
பயணம் செய்யும் தூரத்தைப் பொறுத்து, பெரியவர்களுக்கான பேருந்து, ரயில் கட்டணங்கள் மூன்று முதல் நான்கு காசுகள் அதிகரித்துள்ளன.
மூத்த குடிமக்கள், மாணவர்கள், உடற்குறையுள்ளோர், குறைந்த வருமான ஊழியர்கள் ஆகியோருக்கான சலுகை கட்டணம் ஒரு காசு கூடியது.
பொதுப் போக்குவரத்துக் கட்டணம் கடைசியாக 2019ல் உயர்த்தப்பட்டது. கொவிட்-19 காரணமாக, கடந்த ஆண்டு கட்டண உயர்வு நிறுத்திவைக்கப்பட்டது.
பொதுப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு செலவுகள் அதிகரித்திருப்பது, கொவிட்-19 காரணமாக பொதுப் போக்குவரத்தில் பயணம் மேற்கொள்வோர் எண்ணிக்கை குறைந்திருப்பது போன்றவற்றை சுட்டி, கட்டணங்களை 2.2 விழுக்காடு உயர்த்த பொதுப் போக்குவரத்து மன்றம் முடிவெடுத்தது.