52,000 ஊழியர்கள் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை

52,000 ஊழியர்கள் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை

3 mins read
e0c92dd7-6d16-4ac7-b7a6-c1cce7e71f2a
-

சிங்­கப்­பூ­ரில் ஏறத்­தாழ 52,000 ஊழி­யர்­கள் இன்­னும் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­வில்லை என்று மனி­த­வள அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

அவர்­களில் 6,700 பேர் 60 வய­தும் அதற்­கும் மேற்­பட்­ட­வர்­கள் என்­றும் அவர்­க­ளுக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டால் கடு­மை­யான நோய் அல்­லது மர­ணம் ஏற்­படும் அபா­யம் அதி­கம் இருப்­ப­தா­க­வும் அமைச்சு கூறி­யது.

அவர்­களில் சிலர் மட்­டுமே

மருத்­துவ அடிப்­ப­டை­யில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ளத் தகுதி பெறா­த­வர்­கள். சிங்­கப்­பூ­ரின் ஊழி­ய­ர­ணி­யில் 98 விழுக்­காட்­டி­னர் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ளதை அமைச்சு சுட்­டி­யது. இதில் சுய தொழில் செய்­ப­வர்­கள் சேர்த்­துக்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

இம்­மா­தம் 19ஆம் தேதி நில­

வ­ரப்­படி 80 விழுக்­காடு நிற­வ­னங்­க­ளின் ஊழி­யர்­கள் அனை­வ­ரும் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­னர். இது மிக­வும் பாராட்­டிற்­கு­ரிய முன்­னேற்­றம் என்று அமைச்சு தெரி­வித்­தது.

இம்­மா­தம் 5ஆம் தேதி நில­வ­ரப்­படி 75,000 ஊழி­யர்­கள் தடுப்­பூசி போட்­டி­ருக்­க­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இந்த எண்­ணிக்கை குறைந்­துள்­ளது.

அடுத்த மாதம் 15ஆம் தேதி­யி­லி­ருந்து தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத ஊழி­யர்­கள் வேலை­யி­டங்­

க­ளுக்­குச் செல்ல அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டார்­கள் என்று சுகா­தார அமைச்சு நேற்று முன்­தி­னம் அறி­வித்­தது.

24 மணி நேரத்­துக்கு முன்பு கொவிட்-19 பரி­சோ­தனை செய்­து­கிரு­மித்­தொற்று இல்லை என்று உறுதி செய்­து­கொண்­டா­ளும் அவர்­கள் வேலை­யி­டங்­க­ளுக்­குச் செல்ல முடி­யாது என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

180 நாட்­க­ளுக்­குள் மருத்­துவ அடிப்­ப­டை­யில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளத் தகுதி இல்­லா­த­வர்­கள் அல்­லது கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்டு அதி­லி­ருந்து குண­ம­டைந்­தி­ருந்­தால் வேலை­

யி­டத்­துக்­குத் திரும்­ப­லாம்.

ஒரு­முறை தடுப்­பூசி மட்­டும் போட்­டுக்­கொண்ட ஊழி­யர்­கள் வேலை­யி­டத்­துக்­குத் திரும்­ப­லாம்.

ஆனால் அதற்கு முன்பு அவர்­கள் அடுத்த மாதம் 31ஆம் தேதி வரை கொவிட்-19 பரி­சோ­தனை செய்­து­கொண்டு கிரு­மித்­தொற்று இல்லை என்பதை உறுதி செய்­து­கொள்ள வேண்­டும்.

இந்­தப் பரி­சோ­த­னைக்­கான செலவை சம்­பந்­தப்­பட்ட ஊழி­யர்­கள் ஏற்க வேண்­டும்.

அடுத்த மாதம் 31ஆம் தேதிக்­குப் பிறகு அவர்­கள் வேலை­யி­டத்­துக்­குச் செல்ல வேண்­டு­மா­யின் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டி­ருக்க வேண்­டும்.

வீட்­டி­லி­ருந்து வேலை செய்­யும் ஊழி­யர்­களில் 50 விழுக்­காட்­டி­னர் அடுத்த மாதம் 1ஆம் தேதி­யி­லி­ருந்து வேலை­யி­டத்­துக்­குத் திரும்­ப­லாம் என்று இம்­மா­தம் 14ஆம் தேதி­யன்று சுகா­தார அமைச்சு கூறி­யது.

கடந்த செப்­டம்­பர் மாதத்­தி­லி­ருந்து வீட்­டி­லி­ருந்து வேலை செய்­யும் அணு­கு­முறை வழக்­க­மா­ன­தாக இருந்து வரு­கிறது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிப்­ப­டைந்­த­வர்­கள் எண்­ணிக்கை அதி­க­ரித்­த­தால் இந்த அணு­கு­முறை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது.

"மிக வேக­மாக, எளி­தா­கப் பர­வக்­கூ­டிய ஓமிக்­ரான் கொவிட்-19 கிருமி வகை தலை­தூக்­கி­யுள்­ளது. இது டெல்டா கிருமி வகை­யை­விட வேக­மா­கப் பர­வக்­கூ­டி­யது. எனவே, ஓராண்­டுக்கு முன்பு இருந்த நிலை­யை­விட கிரு­மித்­தொற்று ஏற்­படும் அபா­யம் தற்­போது அதி­கம்.

"அடுத்த சில மாதங்­களில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத ஊழி­யர்­கள், குறிப்­பாக முதி­ய­வர்­க­ளுக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டால், அவர்­

க­ளால் நமது சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறைக்கு அழுத்­தம் ஏற்­படும்," என்று மனி­த­வள அமைச்சு தெரி­வித்­தது.

"முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட ஊழி­ய­ர­ணி­யால் பாது­காப்­பு­டன் செயல்­பட முடி­யும். ஊழி­யர்­க­ளின் உயி­ருக்கு ஏற்­ப­டக்­கூ­டிய ஆபத்து குறை­வாக இருக்­கும். மருத்­துவ அடிப்­ப­டை­யில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள முடி­யா­த­வர்­க­ளைப் பாது­காக்க நாம் கூடு­தல் நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டும்," என்று அமைச்சு கூறி­யது.

தொடர்ந்து தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­மல் இருக்­கும் ஊழி­யர்­களை சாத்­தி­யம் இருந்­தால் வீட்­டி­லி­ருந்து வேலை செய்ய முத­லா­ளி­கள் அனு­ம­திக்­க­லாம் என்று அமைச்சு தெரி­வித்­தது.

அல்­லது தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத ஊழி­யர்­க­ளைச் சம்­ப­ளம் இன்றி விடுப்­பில் அனுப்­ப­லாம். இதற்கு இரு­த­ரப்­பி­ன­ரின் இணக்­க­மும் தேவை.

வேறு வழி இல்லை என்­றால் மட்­டுமே தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத ஊழி­யர்­களை வேலை­யி­லி­ருந்து நீக்­க­லாம்.

இத்­த­கைய பணி­நீக்­கம் முறை­யற்­ற­தாக எடுத்­துக்­கொள்­ளப்­ப­டாது. ஊழி­யர்­க­ளால் வேலை­யி­டத்­துக்­குச் சென்று தங்­கள் பணி­யைச் செய்ய முடி­யா­ததே இதற்­குக் கார­ணம்.

"பெரும்­பா­லான ஊழி­யர்­கள் அடிக்­கடி வேலை­யி­டம் திரும்­பும்­போது தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­தால் அவ்­வாறு செய்ய முடி­யாத ஊழி­யர்­க­ளின் செயல்­பாடு பாதிக்­கப்­படும்.

"அது தனி­ந­பர் அடிப்­ப­டை­

யி­லும் குழு வேலை அடிப்­ப­டை­யி­லும் ஒட்­டு­மொத்த அள­வில் நிறு­வ­னத்­துக்­கும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தும்," என்று அமைச்சு கூறி­யது.

மருத்­துவ அடிப்­ப­டை­யில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள முடி­யாத ஊழி­யர்­க­ளுக்­குக் கூடு­தல் பாது­காப்பு வழங்­கு­வது குறித்து முத­லா­ளி­கள் பரி­சீ­லனை செய்ய வேண்­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

அவர்­கள் தொடர்ந்து வீட்­டி­லி­ருந்து வேலை செய்ய ஏற்­பாடு செய்­யப்­ப­ட­லாம் அல்­லது தனி­யாக இருந்து வேலை செய்­யக்­கூ­டிய பொறுப்­பு­கள் தரப்­ப­ட­லாம்.

இன்­னும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத ஊழி­யர்­களைக் கூடிய விரை­வில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள அவர்­க­ளது முத­லா­ளி­கள் ஊக்­கு­விக்க வேண்­டும் என முத்­த­ரப்­புப் பங்­கா­ளித்­து­வம் கேட்­டுக்­கொள்­வ­தாக அமைச்சு தெரி­வித்­தது.