கொவிட்-19 சிகிச்சை நிலையங்களில் சுகாதாரப் பராமரிப்புத் துறையினருக்கு உதவ சிங்கப்பூர் ஆயுதப் படை 70 பேர் கொண்ட குழுவை அனுப்பியுள்ளது. அக்குழு இரண்டு சிகிச்சை நிலையங்களில் உதவி வருகிறது.
இக்குழுவில் இருந்து உதவி செய்ய முன்வந்துள்ளார் முழுநேர தேசிய சேவையாளரான லான்ஸ் கார்ப்பரல் கைருல் அப்துல் ரஷீத். கொவிட்-19 நோயாளிகளைப் பார்த்துக்கொள்ளும் தாதியருக்கு அதிக வேலை இருப்பதால் நோயாளிக்கு அவ்வப்போது தனியாளாக இருந்து பணிவிடை செய்யும் நிலை கைருலுக்கு ஏற்பட்டுள்ளது. அது சவால்மிக்கது என்றபோதிலும் மனநிறைவைத் தருவதாக அவர் கூறினார்.

