இரு நிவாரணக் காலகட்டங்கள் நீட்டிப்பு

இரு நிவாரணக் காலகட்டங்கள் நீட்டிப்பு

2 mins read
d38524de-bd72-4853-96b8-5c0f22bc6137
-

கட்­டு­மான நிறு­வ­னங்­க­ளுக்கு அவற்­றின் கட்­டு­மான பொறுப்­பு­

க­ளி­லி­ருந்து கூடு­த­லாக இரண்டு மாத நிவா­ர­ணம் வழங்­கப்­ப­டு­கிறது. இது அடுத்த ஆண்டு பிப்­ர­வரி மாதம் 28ஆம் தேதி வரை நீட்­டிக்­கப்­படும்.

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை கார­ண­மா­கப் பல கட்­டு­மா­னப் பணி­கள் தாம­தம் அடைந்­துள்­ளன.

ஒப்­பந்­தத்­தில் சம்­பந்­தப்­பட்­டுள்ள அனைத்­துத் தரப்­பு­களும் ஊழி­யர்­

க­ளின் சம்­ப­ளம் தவிர்த்து கூடு­தல் செல­வு­க­ளைப் பகிர்ந்­து­கொள்­வ­தற்­கான கால­கட்­ட­மும் நீட்­டிக்­கப்­படும்.

இதற்­கி­டையே, வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­குச் சம்­ப­ளம் கொடுக்க ஏற்­படும் செல­வு­களை ஈடு­கட்ட கூடு­தல் ஒப்­பந்­தத் தொகைக்கு விண்­ணப்­பிக்க உத­வும் நிவா­ர­ணக் கட்­ட­மைப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை நீட்­டிக்­கப்­படும்.

இந்த நீட்­டிப்­பு­கள் நிலச் சொத்து, சுற்­றுப்­பு­றச் சேவை­கள், பாது­காப்பு ஆகிய பிரி­வு­க­ளுக்­கும் வழங்­கப்­

ப­டு­கிறது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

சட்ட, அம­லாக்க நட­வ­டிக்­கை­

க­ளுக்­கும் செல­வு­க­ளைப் பகிர்ந்­து­கொள்­வ­தற்­கு­மான நிவா­ர­ணக் கால­கட்­டம் இதற்கு முன்பு கடந்த செப்­டம்­பர் மாதத்­தி­லி­ருந்து இம்­மா­தம் 31ஆம் தேதி வரை நீட்­டிக்­கப்­பட்­டது.

எதிர்­பா­ராத நிகழ்­வு­கள் இல்லை என்­றால் அடுத்த ஆண்டு பிப்­ர­வரி மாதம் 28ஆம் தேதி வரை­யி­லான நீட்­டிப்பு இறு­தி­யா­ன­தாக இருக்­கும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சு நேற்று கூறி­யது.

"இந்த இறுதி நீட்­டிப்­பைப் பயன்­

ப­டுத்தி முன்­னோக்­கிச் செல்­லும் நோக்­கு­டன் நீடித்த நிலைத்­தன்­மை­மிக்க நட­வ­டிக்­கை­க­ளுக்கு அனைத்­துத் தரப்­பி­ன­ரும் இணக்­கம் காண வேண்­டும் என ஊக்­கு­விக்­கி­றோம்," என்று அமைச்சு கேட்­டுக்­கொண்­டது.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யால் வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்ட கட்­டு­மா­னப் பணி­கள், தற்­போது படிப்­ப­டி­யாக முன்­னேற்­றம் கண்டு வரு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இருப்­பி­னும், சில நிறு­வ­னங்­கள் தொடர்ந்து சவால்­களை எதிர்­கொள்­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஊழி­யர் பற்­றாக்­குறை, அதி­க­ரித்­துள்ள செல­வு­கள் ஆகி­ய­வற்­றால் சில நிறு­வ­னங்­கள் சிர­மப்­

ப­டு­வ­தாக அறி­யப்­ப­டு­கிறது.