நிரந்தரவாசியாவதற்கு தடுப்பூசி கட்டாயம் தேவை

சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­யா­வ­தற்­கும் வேலை அனு­மதி அட்­டை­கள், நீண்­ட­கால குடி­நு­ழைவு அட்­டை­க­ளுக்­கும் விண்­ணப்­பம் செய்­ப­வர்­கள் கட்­டா­ய­மாக கொவிட்-19 தடுப்­பூசி போட்­டி­ருக்க வேண்­டும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தப் புதிய விதி­முறை அடுத்த ஆண்டு பிப்­ர­வரி மாதம் 1ஆம் தேதி­யி­லி­ருந்து நடப்­புக்கு வரும்.

வேலை அனு­மதி அட்­டை­யைப் புதுப்­பிப்­ப­வர்­களும் தடுப்­பூசி போட்­டி­ருக்க வேண்­டும்.

இருப்­பி­னும், 12 வய­தும் அதற்­கும் குறை­வான சிறு­வர்­களும் மருத்­துவ அடிப்­ப­டை­யில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ளத் தகுதி பெறா­த­வர்­களும் இதற்கு விதி­வி­லக்கு.

இந்­தப் புதிய விதி­முறை குறித்து கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­குழு நேற்று முன்­தி­னம் அறி­வித்­தது.

ஓமிக்­ரான் கிருமி வகையை எதிர்­கொள்ள எடுக்­கப்­படும் நட­

வ­டிக்­கை­களில் இந்­தப் புதிய விதி­மு­றை­யும் அடங்­கும்.

"சிங்கப்பூரில் தடுப்­பூசி

போட்­டுக்­கொண்­டோர் விகி­தம் தொடர்ந்து அதி­க­மாக நீடிக்க புதிய விதி­முறை உத­வும். அத்­து­டன் நமது சமு­தா­யம் மீண்­டும் பழை­ய­படி இயங்­க­வும் பொரு­ளி­யலை உயிர்ப்­பிக்­க­வும் இவை கைகொ­டுக்­கும்," என்று பணிக்­குழு கூறி­யது.

விண்­ணப்­பங்­கள் சமர்ப்­பிக்­கப்­ப­டும்­போது வேலை அனு­மதி அட்டை வைத்­தி­ருக்­கும் தங்­கள் ஊழி­யர்­களும் அவர்­க­ளைச் சார்ந்­த­வர்­களும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் என முத­லா­ளி­கள் சத்­தி­யப் பிர­மா­ணம் செய்ய வேண்­டும்.

வேலை அனு­மதி அட்டை வைத்­தி­ருக்­கும் ஊழி­யர்­கள் தங்­கள் தடுப்­பூசி சான்­றி­தழ்­க­ளைச் சமர்ப்­பிக்க வேண்­டும் அல்­லது காட்­ட­வேண்­டும்.

மின்­னி­லக்க ரீதி­யாக உறுதி செய்­யப்­ப­டக்­கூ­டிய சான்­றி­தழ் இருந்­தால் அதைக் குடி­நு­ழைவு, சோத­னைச்­சா­வடி ஆணை­யத்­தின் தடுப்­பூசி சான்­றி­தழ் சரி­பார்ப்பு இணை­ய­வா­ச­லில் பதி­வேற்­றம் செய்ய வேண்­டும்.

மின்­னி­லக்க ரீதி­யாக உறுதி செய்­யப்­ப­டக்­கூ­டிய சான்­றி­தழ் இல்­லா­வி­டில், விமா­னச் சேவை­, பட­குச் சேவை வழங்­கும் நிறு­

வ­னங்­கள் ஆகி­ய­வற்­றி­ல்

பய­ணம் தொடங்­கு­வ­தற்கு முன்பு சோத­னைச்­சா­வ­டி­யில் ஆவணங் களைச் சமர்ப்­பிக்க வேண்­டும்.

தேவை­யான ஆவ­ணங்­க­ளைச் சமர்ப்­பிக்க முடி­யா­த­வர்­கள் சிங்­கப்­பூர் வரும் விமா­னத்­துக்­குள் அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டார்­கள். முன்­கூட்­டியே அனு­மதி பெற்­ற­வர்­கள் மட்­டுமே இதற்கு விதி­வி­லக்கு.

வெளி­நா­டு­களில் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் தேசிய தடுப்­பூசிப் பதி­வ­கத்­தில் உள்ள தங்­கள் தடுப்­பூசி பதி­வில் அதைக் குறிப்­பிட வேண்­டும்.

அதை­ய­டுத்து, பொது சுகா­தா­ரத் தயார்­நிலை மருந்­த­கத்­தில் பரி­சோ­தனை செய்து கிரு­மித்­தொற்று இல்லை என்பதை உறுதி செய்ய சிங்­கப்­பூர் வந்­த­டைந்­த­தும் அவர்­க­ளுக்கு 30 நாட்­கள் கால அவ­கா­சம் வழங்­கப்­படும்.

கிரு­மித்­தொற்று இல்லை என்று உறுதி செய்­யப்­பட்­டதை அடுத்து, சிங்­கப்­பூ­ரில் அவர்­கள் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள வேண்­டும். அவ்­வாறு செய்­யத் தவ­றி­னால் அவர்­க­ளது வேலை அனு­மதி அட்­டை­கள் ரத்து செய்­யப்­படும் என்று பணிக்­குழு தெரி­வித்­தது. வேலை அனு­மதி அட்டை வைத்­தி­ருப்­போ­ரைச் சார்ந்­த­வர்­

க­ளைப் பொறுத்­த­வரை, 12 வய­துக்­குக் குறை­வான சிறு­வர்­க­ளுக்கு இந்­தத் தடுப்­பூசி தொடர்­பான நிபந்­த­னை­கள் பொருந்­தாது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!