தெம்பனிஸ் விபத்தில் உயிரிழந்த ஒரே நபர், அனுபவமிக்க கலை ஆசிரியர்

2 mins read
9d0bb3cd-c647-4100-988c-b6439792c658
அப்பர் தாம்சனில் உள்ள 'ஹோலி ஸ்பிரிட்' தேவாலயத்தில் திரு வோங்கின் கண்விழிப்புச் சடங்கு நடைபெற்றது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தெம்­ப­னி­சில் கடந்த வியா­ழக் கிழமை நிகழ்ந்த விபத்­தில் உயி ரிழந்த ஒரே நபர் 59 வயது திரு கென் வோங்.

ஏறக்­கு­றைய 25 வருட காலம் கலைத் துறை­யில் அனு­ப­வம் பெற்ற வர். தனது வீட்­டில் அவர் கலைப் பாடங்­களை நடத்­தி­வந்­தார்.

அவ­ரது மாண­வர்­களில் ஒரு­வ­ரான டான் கூன் யோங், 67, கொள்­ளை­நோய் கார­ண­மாக வரு­மா­னத்தை இழந்­த­தால் திரு வோங் தனி­யார் வாட­கைக் காரை ஓட்டி வந்­த­தாக ஃபேஸ்புக் பதி­வில் கூறி­யி­ருந்­தார்.

அக்­டோ­பர் மாதம் வெளி­யிட்ட மற்­றொரு பதி­வில் திரு வோங் கனி­வான தன்­ன­ல­மற்ற ஆசி­ரி­யர் என்று திரு டான் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

நண்­பர் ஒரு­வர் மூலம் திரு வோங்­கின் அறி­மு­கம் கிடைத்­த­தும் 2011ல் அவ­ரது மாண­வ­ராக டான் மாறி­னார்.

நேற்று அப்­பர் தாம்­ச­னில் உள்ள ஹோலி ஸ்பி­ரிட் தேவா­ல­யத்­தில் திரு வோங்­கின் கண்­வி­ழிப்­புச் சடங்கு நடை­பெற்­றது. இதில் உற்­றார் உற­வி­னர், நண்­பர்­கள் என சுமார் 30 பேர் கலந்­து­கொண்­ட­னர்.

பிரார்த்­த­னைக்­குப் பிறகு 12.45 மணி­ய­ள­வில் மண்­டா­யில் உள்ள தக­னச் சாலையை நோக்கி திரு வோங்­கின் இறுதி ஊர்­வ­லம் புறப்­பட்­டது. இதில் பங்­கேற்ற ஒரு­வர், திரு வோங்­கின் சகோ­தரி என்று தன்னை கூறிக்­கொண்­டார்.

மூதாட்டி ஒரு­வரை கறுப்­புச் சட்டை அணிந்த இரு இளை­யர்­கள் தாங்­கிப் பிடித்து அழைத்­துச் சென்­ற­னர்.

சென்ற ஞாயிற்­றுக்­கி­ழமை கேத்­த­ரின் சுவா என்­ப­வ­ரின் பெய­ரில் ஃபேஸ்புக்­கில் வெளி­யான காணொ­ளி­யில் தெம்­ப­னிஸ் அவென்யூ 1 வழி­யாக வேக­மா­கச் செல்­லும் சிவப்­பு­நிற பென்ஸ் கார், தடுப்­பு­க­ளைத் தாண்டி வல­து­பக்­கத்­தில் இருந்த வோங்­கின் வெள்ளை நிற டயோட்டா கார் மீது மோதுவதைக் காண முடி­கிறது.

இந்­தக் காணொ­ளியை 'உங்­க­ளு­டைய பொறுப்­பற்ற செய­லால் எங்­க­ளு­டைய நண்­ப­ரின் உயிர் பறி­போ­னது' என்ற தக­வ­லு­டன் பலர் சமூக ஊட­கங்­களில் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

நான்கு கார்­கள், ஒரு டாக்சி, ஒரு மோட்­டார் பைக் ஆகி­யவை விபத்­தில் சிக்­கின.

விபத்­தில் திரு வோங் தனது இருக்­கை­யில் சிக்­கிக்­கொண்­டார். அப்­போது அவ­ருக்கு சுய­நி­னைவு இல்லை என்று சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் மீட்­புக் குழு­வி­னர் தெரி­வித்­த­னர்.

சாங்கி பொது மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டு அங்கு திரு வோங் உயி­ரி­ழந்­தார். சுய­நி­னைவு இழந்த நிலை­யில் கிடந்த 22 முதல் 38 வயது வரை­யி­லான மேலும் நான்கு பேர் சாங்கி பொது மருத்து வம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர்.

சம்­ப­வத்­துக்­குப் பிறகு ஆபத்­தான முறை­யில் காரை ஓட்டி மர­ணத்தை ஏற்­ப­டுத்­தி­ய­தாக 33 வயது ஆண் ஓட்­டு­நர் ஒரு­வரை காவல் துறை­யி­னர் கைது செய்­துள்­ள­னர். அவர் மது அருந்­தி­யி­ருக்­க­லாம் என நம்­பப்­ப­டு­கிறது. காவல்­து­றை­யின் விசா­ரணை தொடர்­கிறது.