வீவக மறுவிற்பனை வீட்டு விலை உயர்வு அடுத்த ஆண்டில் மெதுவடையலாம்: கணிப்பு

வீவக மறுவிற்பனை வீட்டு விலை உயர்வு அடுத்த ஆண்டில் மெதுவடையலாம்: கணிப்பு

2 mins read
c7950193-a3a3-49d7-a3b1-66a3cca421a0
அங் மோ கியோ வட்டாரத்தில் உள்ள வீவக வீடுகளின் தோற்றம். ஆறு ஆண்டுகளாக குறைந்துவந்த வீவக மறுவிற்பனை வீட்டு விலைகள் தற்போது ஏறுமுகமாக உள்ளன.கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக(வீவக) மறு­விற்­பனை வீட்­டின் விலை­கள் எட்­டாத உய­ரத்­தில் இருக்­கி­றதா? அடுத்த ஆண்டு வரை பொறுத்­தி­ருந்­தால் வீவக மறு­விற்­பனை வீடு­களை நல்ல விலைக்கு வாங்க வாய்ப்­புள்­ளது.

சொத்து விலை அதி­க­ரிப்பை மட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக அர­சாங்­கம் அண்­மை­யில் அறி­வித்­துள்ள நட­வ­டிக்­கை­கள் அதற்கு வழி­வ­குக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

வீவக மறு­விற்­பனை வீட்­டின் விலை­கள் இரட்டை இலக்க வளர்ச்சி கண்­டுள்­ளது.

ஆனால் அடுத்த ஆண்­டில் அந்த வளர்ச்சி 5 முதல் எட்டு விழுக்­காடு வரை ஒற்றை இலக்­கமாக இருக்­கும் என்று குறைந்­தது இரண்டு சொத்து நிபு­ணர்­கள் கணித்­துள்­ள­னர்.

தேசிய பல்­க­லைக்கழ­கத்­தின் சொத்து மற்­றும் நகர்ப்­புற ஆய்­வுக் கழ­கப் பேரா­சி­ரி­யர் சிங் டியன் ஃபூ, 2022ல் வீட்டை விற்­ப­வர்­கள் கேட்­கும் தொகைக்­கும் வீட்டை வாங்­கு­ப­வர்­கள் கொடுக்க விரும்­பும் தொகைக்­கும் இடை­யி­லான இடை­வெளி குறைந்­து­வி­டும் என்று தமது எதிர்­பார்ப்­பைத் தெரி­வித்­துள்­ளார்.

"வீட்டை விற்­ப­வர்­கள் விற்­கப்­படும் காலத்­தைக் குைறப்­ப­தற்­காக அவர்­கள் யதார்த்­த­மான விலையை நிர்­ண­யிக்­க­லாம்," என்­றார் அவர்.

வீவக வீட்­டுக் கட­னில் கட­னுக்­கான மதிப்­பின் வரம்பு குறைக்கப்­பட்டுள்ளது. இத­னால் வீட்டை வாங்­கு­ப­வர்­கள் தங்­க­ளு­டைய நிதி வரம்­புக்­குட்­பட்டு வீட்டை யதார்த்­த­மான விலைக்கு வாங்க முயற்சி செய்­வார்­கள் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

இம்­மா­தம் 16ஆம் தேதி கடன் வாங்­கு­ப­வர்­க­ளின் கடன் செலுத்­தும் மொத்த விகி­தத்தை அர­சாங்­கம் கடு­மை­யாக்­கி­யது.

சொத்­துச்­சந்­தை­யில் வீட்­டின் விலை­கள் கட்­டுக்­க­டங்­கா­மல் அதி­க­ரித்து திடீ­ரென அடி­மட்­டத்­துக்­குச் சரி­வ­தைத் தடுப்­ப­தற்­காக இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளன.

வீட்டை வாங்­கு­ப­வர்­களும் முன் யோச­னை­யு­டன் விவே­கத்­து­டன் செயல்­ப­ட­வும் இது ஊக்­கு­விக்­கிறது. கூடு­தல் முத்­திரை வரி­யும் உயர்த்­தப்­பட்­டுள்­ளது.

இருந்­தா­லும் முதல் முறை­யாக வீடு வாங்­கும் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு வரி­யி­லி­ருந்து விலக்கு அளிக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் ஒரே இர­வில் வீடு வாங்­கு­வோ­ருக்கு சாத­க­மாக நிலைமை மாறி­வி­டும் எனக் கூற முடி­யாது என்­கி­றார் சொத்து நிறு­வ­ன­மான 'ஆரஞ்ச்டீ அண்ட் டை'யின் ஆய்வு மற்­றும் பகுப்­பாய்­வுப் பிரி­வின் மூத்த உதவி தலை­வர் கிறிஸ்­டீன் சன்.

வீவ­க­வின் தேவைக்­கேற்ப கட்­டப்­படும் வீடு­க­ளின் கட்டுமானம் தொடர்ந்து தாம­த­மா­வ­தால் தேவைக்கு ஏற்ப வீடு­கள் இருக்­காது. இத­னால் உட­ன­டி­யாக வீடு வாங்க விரும்­பு­வோர், மறு­விற்­பனை வீடு­களை வாங்க முற்­ப­டு­வார்­கள் என்று அவர் கூறி­னார்.

வீவக, அதன் வீடு­க­ளுக்கு வலு­வான தேவை இருப்­ப­தால் 2022 முதல் 2023 வரை ஆண்­டுக்கு 23,000 தேவைக்­கேற்ப கட்­டப்­படும் வீடு­களை வெளி­யிட உறுதி கூறி யுள்ளது.