ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளில், இளையர் ஒருவர் தொடர்ந்து பல குற்றங்களைப் புரிந்துள்ளார். பெண் ஒருவரை மானபங்கப்படுத்தியது, பள்ளிவாசலில் வழிபாட்டில் ஈடுபட்டவர், உணவு விநியோகிப்பாளர், சொந்த தாயார் ஆகியோரிடம் திருடியது ஆகியவை அவற்றில் அடங்கும்.
தற்போது 22 வயதாகும் நூர் ஹஃபிசாத் சிலாமாட்டுக்கு நேற்று இரண்டு மாதங்கள் இரண்டு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
திருட்டு, மானபங்கம், நேர்மையற்ற முறைகேடு ஆகிய ஐந்து குற்றச்சாட்டுகளை ஹஃபிசாத் ஒப்புக்கொண்டார். மேலும் ஏழு குற்றச்சாட்டுகள் தண்டனையில் பரிசீலிக்கப்பட்டன.
குற்றங்களைப் புரியும்போது வேலையில்லாமல் இருந்த ஹஃபி சாத், 2019, மார்ச் 7ஆம் தேதி அன்று வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் ஒன்றில் மின்தூக்கிக்
காகத் காத்திருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
27 வயது பெண் ஒருவர் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் முன்தூக்கிக் கூடத்தில் மின்தூக்கிக்காக காத்திருந்தபோது, ஹஃபிசாத் அவரைக் கவனித்தார். மின்தூக்கிக் கதவு திறக்கும் நேரத்தில் ஹஃபிசாத் தன் கையால் பெண்ணின் இடது பிட்டத்தை ஒரு முறை தட்டினார். அப்பெண் திரும்பி ஹஃபிசாத்தை முறைத்தார். இது கண்காணிப்பு கேமராவில் பதிவானது. பாதிக்கப்பட்ட பெண் காவல்துறை
யினரை அழைத்தார்.
அந்த ஆண்டின் பிற்பகுதியில், ஹஃபிசாத் திருடத் தொடங்கினார். நவம்பர் 16, 2019 அன்று, 51 வயதான தமது தாயார் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவர் தாயின் பையில் இருந்து $250ஐ திருடினார்.
பிப்ரவரி 10, 2020 அன்று, ஹஃபிசாத் பொங்கோலில் உள்ள அல்-இஸ்லா பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 52 வயது ஆடவரின் கைபேசியைத் திருடினார்.
இந்த ஆண்டு ஜனவரி 23 அன்று, 47 வயதான கிராப்ஃபுட் உணவு விநியோகிப்பாளர் பொங்கோலில் உள்ள ஒரு புளோக்கின் கீழே தனது மின்சார சைக்கிளை விட்டுச் சென்றார்.
அவர் திரும்பி வந்தபோது, மின்சார சைக்கிளில் அவரது கிராப் பையில் இருந்த அவரது கருப்புப் பை காணாமல் போனதை உணர்ந்தார். பையில் அவரது பாஸ்போர்ட் மற்றும் $700 பணம் அதில் இருந்தது.
கண்காணிப்பு கேமராக்களில் ஹஃபிசாத் குற்றச்செயல்கள் பதிவானதை அடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.

