கவியரசு கண்ணதாசன் விருது பெற்றார் சையத் அஷரத்துல்லா

2 mins read
23ff9cd3-091f-495e-be09-1e46ed1187ef
சிறப்பு விருந்தினர் திரு.கி. கார்த்திகேயன் (வலயிருந்து 2வது) திரு அஷரத்துல்லாவிற்குக் கவியரசு கண்ணதாசன் விருதினை வழங்குகிறார். அருகில் எழுத்தாளர் கழகத் தலைவர் திரு. நா. ஆண்டியப்பன், செயலாளர் திருவாட்டி கிருத்திகா. படம்: சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கம் -

சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழகம் ஆண்­டு­தோ­றும் வழங்­கும் கவி­ய­ரசு கண்­ண­தா­சன் விருது இவ்­வாண்டு எழுத்­தா­ளர், கதா­சி­ரி­யர், நாடக ஆசி­ரி­யர், பாட­லா­சி­ரி­யர் சையத் அஷ­ரத்­துல்­லா­விற்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

32 வய­தா­கும் அவர் பல்­க­லைக் கழ­கத்­தில் மாண­வ­ராக இருந்த காலத்­தில் சிங்­கப்­பூர்த் தேசி­யப் பல்­க­லைக்­க­ழ­கத் தமிழ்ப் பேர­வை­யி­ல் எழுத்துப் பணிகளில் ஈடு பட்டார். பின்­னர் தொலைக்­காட்சி, வானொலி நாட­கங்­க­ளி­லும் அவ­ரது எழுத்­துப் பணி­கள் சிறந்து விளங்­கின. திரு அஷ­ரத்­துல்லா பாடல்­க­ளை­யும் எழு­தி­யுள்­ளார்.

இம்­மா­தம் 18ஆம் தேதி மாலை மணி 6.00 முதல் இணை­யத்­தில் குவி­யம் (Zoom) வழி­யாக நடை­பெற்ற கவி­ய­ரசு கண்­ண­தா­சன் விழா­வில் திரு அஷ­ரத்­துல்லா விருது பெறு­வது அறி­விக்­கப்­பட்டு அந்­தக் காணொளி ஒளி­யேற்­றப்­பட்­டது.

முன்­ன­தாக சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்ட முன்னாள் நியமன நாடாளு­மன்ற உறுப்­பி­ன­ரும் பெட்­ரோ­லி­யத் தொழிற்­து­றை­யின் ஐக்­கி­யத் தொழி­லா­ளர் சங்­கத்­தின் பொதுச் செய­லா­ள­ரு­மான திரு கே கார்த்தி­கே­ய­னின் அலு­வ­ல­கத்­தில் விரு­த­ளிப்பு நிகழ்வு இடம்­பெற்­றது.

கவி­ய­ர­ச­ரின் சம­கா­லத்­த­வ­ரும் மூத்த கவி­ஞர்­களில் ஒரு­வ­ரு­மான கவி­ஞர் முத்­து­லிங்­கம் "கலை­யு­ல­கக் கம்­பன்" எனும் தலைப்­பில் கவி­ய­ரசு கண்­ண­தா­சன் பற்­றிச் சிறப்­புரை ஆற்­றி­னார்.

தமிழகத்தின் கண்டனூரைச் சேர்ந்த கவிஞர் அரசி பழனியப்பன் கவிதாஞ்சலி படைத்தார்.

கவி­ய­ரசு கண்­ண­தா­சன் விழாவை ஒட்டி இவ்­வாண்­டும் கண்­ண­தா­சன் பாட்­டுத் திறன் போட்டி இரு பிரி­வு­க­ளாக நடத்­தப்­பட்­டது.

இரண்டு பிரி­வு­க­ளி­லும் முதல் பரிசு வென்­ற­வர்­க­ளின் காணொ­ளி­கள் விழா­வில் ஒளி­யேற்­றம் கண்டன.

அம­ரர் சுப. அரு­ணா­ச­லம் நினைவு பாடல் எழு­தும் போட்­டி­யின் முடி­வு­களும் அறி­விக்­கப்­பட்டு, முதல் பரிசு வென்ற பாடல் இசை­ய­மைக்­கப்­பட்டு நிகழ்ச்சியின்போது ஒலி­ப­ரப்­பப்­பட்­டது.