குடும்ப வன்முறையைத் தடுக்க ஒருங்கிணைந்த முயற்சி

குடும்ப வன்முறையைத் தடுக்க ஒருங்கிணைந்த முயற்சி

1 mins read
17fe01c0-8fab-4d89-b653-a6450919ad77
-

சிங்­கப்­பூ­ரில் குடும்ப வன்­மு­றை­யைத் தடுக்­கும் ஒருங்­கி­ணைந்த முயற்­சி­களை எடுக்க அமைப்­பு­களுக்­கி­டை­யி­லான பணிக்­குழு ஒன்று அமைக்­கப்­பட்­டது.

குடும்ப வன்­மு­றைச் சம்­ப­வங்­களால் அதி­க­மா­னோர் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர், தனி­ந­பர் பாது­காப்பு ஆணையை மீறும் சம்­ப­வங்­கள் அதி­க­ரிப்பு ஆகி­ய­வற்­றின் பின்­ன­ணி­யில் இந்­தக் குழு உரு­வா­னது.

2019ல் குடும்ப உறுப்­பி­னர்­களுக்கு எதி­ராக பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் கோரிய 2,452 தனி­ந­பர் பாது­காப்பு ஆணை விண்­ணப்­பங்­களில் 4,224 வகை­யான வன்­முறை சம்­ப­வங்­கள் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தன. ஒப்­பு­நோக்க, 2016ல் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் கோரிய 2,811 தனி­ந­பர் பாது­காப்பு ஆணை விண்­ணப்­பங்­களில் 3,497 வகை­யான வன்­முறை சம்­ப­வங்­கள் இடம்­பெற்­றி­ருந்­தன.

அமைப்­பு­க­ளுக்­கி­டை­யி­லான பணிக்­கு­ழு­வுக்கு கல்வி மற்­றும் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு துணை அமைச்­சர் சுன் ஷுவெ­லிங்­கும் உள்­துறை மற்­றும் தேசிய வளர்ச்சி துணை அமைச்­சர் முஹம்­மது ஃபைசால் இப்­ரா­ஹி­மும் இணைத் தலை­வர்­க­ளா­கச் செயல்­படுகின்றனர்.

குடும்ப வன்­முறை தொடர்­பிலான விழிப்­பு­ணர்வை அதி­கப்­படுத்­து­வதே பணிக்­கு­ழு­வின் முக்­கிய நோக்­கம். கடந்த அக்­டோ­பர் மாதத்­தில் பணிக்­கு­ழு­வின் 16 பரிந்­து­ரை­க­ளை­யும் அர­சாங்­கம் ஏற்­றுக்­கொண்­டது.

"இதன் தொடர்­பான நட­வ­டிக்­கை­கள் அடுத்த மூன்று ஆண்டு­களில் அறி­மு­கமாகும். குடும்ப வன்­முறை பற்றிய விழிப்­பு­ணர்வை அதி­கப்­ப­டுத்­து­தல், திரு­ம­ணத் தயார்­நி­லைப் பயிற்­சியை மேம்­படுத்­து­தல், வன்­மு­றைக்கு எதி­ரான தேசிய உதவி தொலை­பேசி அழைப்பு எண் ஆகி­யவை முத­லில் அறி­மு­க­மா­கும் என்­றார் சமு தாய, குடும்ப மேம்பாட்டு அமைச் சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி.