தொலைக்காட்சி திரைகளை விற்பதாகக் கூறி மோசடி

தொலைக்காட்சி திரைகளை விற்பதாகக் கூறி மோசடி

1 mins read
cfc2c65a-11e5-4601-b5b3-df731e0e2f00
-

தொலைக்காட்சித் திரைகளை விற்பதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கேரசல் இணையத் தளத்தில் தொலைக்காட்சித் திரைக்கு கட்டணங்களைச் செலுத்தி ஒருவர் வாங்கியதாகவும் அவருக்கு பொருள் வந்து சேரவில்லை என்றும் காவல்துறை தெரிவித்தது. கடந்த நவம்பர் 25ஆம் தேதி பாதிக்கப்பட்டவர் காவல் துறையில் புகார் அளித்தார்.

இதையடுத்து விசாரணை மேற்கொண்ட உட்லண்ட்ஸ் காவல் நிலையத்தின் அதி காரிகள் அந்தப் பேர்வழியின் அடையாளத்தைக் கண்டு பிடித்து நேற்று கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில் இதே போன்ற இதர குற்றச் செயயல்களில் அவர் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று அவர் மீது குற்றம் சாட்டப்படலாம் என காவல்துறை கூறியது.