‘ஓமிக்ரான் வேகமாகப் பரவினாலும் கடுமையாகப் பாதிக்கவில்லை’

ஏற்­கெ­னவே உரு­மா­றிய கொவிட்-19 கிரு­மி­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் ஓமிக்­ரா­னுக்கு பெரிய அள­வில் வித்­தி­யா­சம் இல்லை.

இது, வேக­மாக பர­வும் தன்­மை­யைக் கொண்­டி­ருந்­தா­லும் தீவி­ர பாதிப்­பு­களை இது­வரை ஏற்­ப­டுத்­த­வில்லை என்­பதை சான்­று­கள் காட்­டு­வ­தாக நிபு­ணர்­கள் கூறி­யுள்­ள­னர்.

சிங்­கப்­பூ­ரில் ஓமிக்­ரான் பர­வ­லைத் தடுக்க கடந்த ஒரு மாத­கா­ல­மாக கடு­மை­யான கட்­டுப் பாடு­கள் அம­லாக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த நிலை­யில் சென்ற திங்­கள்கிழ­மை­யி­லி­ருந்து ஓமிக்­ரான் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் வீட்­டில் அல்­லது சமூ­கப் பரா­ம­ரிப்பு நிலையங்களில் குண­ம­டைய அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

இதற்கு முன்பு ஓமிக்­ரான் தொற்று உள்­ள­வர்­கள், தேசிய தொற்­று­நோய் தடுப்பு நிலை­யத்­தில் அல்­லது பரா­ம­ரிப்பு நிலையங்களில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

ஓமிக்­ரான் தொற்றுக்கு மாறு­பட்ட வகை­யில் சிகிச்சை அளிப் ­ப­தற்­காக அவர்­களை மற்ற நோயா­ளி­கள் உள்ள மருத்­து­வ­ம­னை­களில் சேர்த்­தால் சுகா­தார வச­தி­க­ளுக்கு நமக்கு நாமே நெருக்­கடி ஏற்­ப­டுத்­திக் கொள்­வ­தற்­குச் சமம் என்று சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்கழ­கத் தில் உள்ள சோ சுவீ ஹோக் பொதுச் சுகா­தா­ரப் பள்­ளி­யின் இணைப் பேரா­சி­ரி­யர் சு லி யாங் கூறி­யுள்­ளார். அதே பள்­ளி­யின் ஆய்­வுப் பிரி­வின் உதவி முதல்­வ­ரான இணைப் பேரா­சி­ரி­யர் அலேக்ஸ் குக், ஓமிக்­ரான் தொற்­றுக்­கான தொடர்புகளைக் கண்­ட­றி­தல், தனி­மைப்படுத்­தல் ஆகி­ய­வற்றை எப்­போ­தும் கடு­மை­யாக பின்­பற்ற முடி­யாது என்­றார்.

"சில மாதங்­க­ளுக்கு முன்பு இல்­லத் தனி­மைக்­கான விதி­மு­றை­கள் அடிக்­கடி மாற்­றப்­பட்­டன. அதே போன்ற சூழ்­நிலை மீண்­டும் ஏற்­ப­டு­வ­தைத் தவிர்க்க வேண்­டும்," என்­றும் அவர் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

சிங்­கப்­பூ­ரில் ஓமிக்­ரான் தொற்று இது­வரை கடு­மை­யா­ன பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­த­வில்லை என்று கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை சுகா­தார அைமச்சு தெரி­வித்­தது.

அந்­தத் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு தீவிர சிகிச்­சையோ, உயிர்­வாயு உத­வியோ தேவைப்­ப­ட­வில்லை. பெரும்­பா­லா­ன­வர்­கள் முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டது அதற்கு ஒரு கார­ண­மாக இருக்­க­லாம் என்று அமைச்சு கூறி­யி­ருந்­தது.

ஆசிய பசி­பிக் மருத்­துவ நுண்­ணு­யி­ரி­யல் மற்­றும் தொற்­று­நோய் தடுப்பு சமூ­கத்­தின் தலை­வ­ரான பேரா­சி­ரி­யர் பால் தம்­பை­யா­வும் ஓமிக்­ரான் பற்றி தனது கருத்தை கூறி­யுள்­ளார்.

"முந்­தைய உரு­மா­றிய கிருமி களை­விட ஓமிக்­ரா­னுக்கு வீரி­யம் அதி­க­மில்லை என்­பது தற்­போது தெரிந்து விட்­டது, இத­னால் காச­நோய் அல்­லது சுவாச தொற்­று­நோய் ேபான்ற எளி­தில் பர­வக் கூடிய நோய்­க­ளைப் போல கொவிட்-19க்கும் சிகிச்சை அளிக்­க­லாம்" என்று அவர் ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!