‘சிங்கப்பூர்-ஜோகூர் ‘விடிஎல்’ பயணச் சீட்டுகளை 3வது தரப்பிடமிருந்து வாங்க வேண்டாம்’

சிங்­கப்­பூ­ருக்­கும் ஜோகூ­ருக்­கும் இடையே 'விடி­எல்' வழி­யாக பயணி களை ஏற்­றிச்செல்­லும் இரண்டு பேருந்து நிறு­வ­னங்­கள், 3வது தரப் பின­ரி­ட­மி­ருந்து பய­ணச் சீட்­டு­களை வாங்க வேண்­டாம் என்று கேட்­டுக் கொண்­டுள்ளன.

சில இணை­யத் தளங்­களில் பய­ணச்­சீட்­டு­கள் அதிக விலைக்கு விற்­கப்­ப­டு­கின்­றன.

கேர­சல் இணை­யத்­த­ளத்­தில் சிங்­கப்­பூர்-மலே­சிய பய­ணச் சீட்டு 120 வெள்­ளிக்கு விற்­கப்­ப­டு­வ­தாக தெரி­கிறது.

இது, தற்­போ­தைய கட்­ட­ணத்­தை­விட எட்டு மடங்கு அதி­கம்.

சிங்­கப்­பூர்-ஜோகூர் பேருந்து பய­ணச்சீட்­டு­களை வாங்­கு­வது சவா­லாக இருப்­ப­தா­லும் போதிய நேரம் இல்­லா­த­தா­லும் பலர் அதிக விலைக்கு வாங்­கத் தயா­ராக உள்­ள­னர் என்று சீன நாளே­டான ஷின்­மின் டெய்லி நேற்று வெளி­யிட்ட தக­வ­லில் தெரி­வித்­தது.

கேர­ச­லில் சேவை வழங்­கும் ஒரு­வர், பய­ணி­கள் சார்­பில் பய­ணச் சீட்­டு­களை வாங்க முன்­ப­ணம் செலுத்தி தனிப்­பட்ட விவ­ரங்­க­ளைத் தெரி­விக்க வேண்­டும் என்று கூறி உள்­ளார்.

'டிரான்ஸ்­டார் டிரா­வல்' நிர்­வாக இயக்­கு­நரான எல்­சன் யாப், நிறு­வ­னத்­தின் இரண்டு அதி­கா­ர­பூர்வ விற்­ப­னைத்­த­ள­மான அதன் இணையத்த­ளம் மற்­றும் 'ஷாப்பி' ஆகி­ய­வற்­றி­லி­ருந்து பய­ணச் சீட்டு களை வாங்­கு­மாறு கேட்­டுக் கொண்­டார்.

பய­ணச்­சீட்­டு­களை வாங்­கு­வ­தற்­காக 3வது தரப்­பி­ன­ரி­டம் கட­வுச்சீட்டு எண், பிறந்த தேதி போன்ற தனிப்­பட்ட விவங்­களை அளிப்­பது பாது­காப்­பா­னது அல்ல என்றார் அவர்.

இதற்­கி­டையே காஸ்வே லிங்க் நிறு­வ­னம், சமூக ஊட­கங்­களில் பய­ணச்­சீட்டு விற்­கப்­ப­டு­வ­தைத் தடுக்கும் முயற்­சி­களை எடுத்து வரு­கிறது.

'விடி­எல்' பய­ணச்­சீட்டு விற்­பனை தொடங்­கி­ய­தும் ஏரா­ள­மான பய­ணி­கள் வாங்க முற்­பட்­ட­தால் அதனை பேருந்து நிறு­வ­னங்­க­ளின் இணை­யத்­த­ளங்­க­ளால் சமா­ளிக்க முடி­ய­வில்லை. இத­னைப் பயன் படுத்தி சிலர் லாபம் சம்­பா­திக்க விரும்­பு­வதாக அந்த நிறுவனத்தின் பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

இரண்டு பேருந்து நிறு­வ­னங் களி­ட­மி­ருந்து வாங்­கப்­படும் பயணச் சீட்­டு­களை மற்­றொ­ரு­வ­ருக்கு மாற்ற முடி­யாது. ஒட்­டு­மொத்­த­மாக பயணச் சீட்­டு­களை வாங்கி அதிக விலைக்கு விற்­பதை இது தடுக்­கிறது. இந்த நிலை­யில் அதி­கா­ர­பூர்வமற்ற முறை­யில் வாங்­கப்­படும் பய­ணச் சீட்­டு­கள் செல்­லு­ப­டியா காது என கூற எங்­க­ளுக்கு உரிமை உள்­ளது என்று காஸ்வே லிங் நிர்­வா­கம் சமூக ஊட­கத்­தில் வெளி­யிட்ட பதிவு ஒன்­றில் எச்­ச­ரித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!