தனியார் வீட்டு வாடகை ஆறாண்டு காணாத உச்சம்

தனியார் வீட்டு வாடகை ஆறாண்டு காணாத உச்சம்

2 mins read
c959a392-341c-4325-a05d-9d74b88a87a3
-

சிங்­கப்­பூ­ரில் தனி­யார் வீட்டு வாடகை ஆறு ஆண்டு காணாத உச்­சத்­தைத் தொட்­டுள்­ளது.

தேவை அதி­க­மாக உள்­ள­தால் வாடகை இன்­னும் அதி­க­ரிக்க வாய்ப்­புள்­ள­தாக சொத்­துச் சந்­தைப் பகுப்­பாய்­வா­ளர்­கள் முன்­னு­ரைக்­கின்­ற­னர்.

இத­னால், பண­வீக்க நெருக்­கு­

த­லுக்கு இடையே, இங்கு வசிக்­கும் வெளி­நாட்­டி­ன­ருக்­கான வீட்­டுச் செலவு கூடும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

கொவிட்-19 கொள்­ளை­நோய் பர­வல் கார­ண­மாக வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான பற்­றாக்­குறை ஏற்­பட்­ட­தால் கட்­ட­டங்­க­ளின் கட்­டு­மா­னம் தாம­த­டைந்­தது.

அத­னால் புதிய வீடு­கள் கிடைக்­கும் வரை வாடகை வீட்­டில் தங்­க­வேண்­டிய நிர்ப்­பந்­தம் ஏற்­பட்­டது.

குறிப்­பாக, வீட்­டி­லி­ருந்து வேலை செய்­வ­தற்­கான வச­தியை நாடி இளம் சிங்­கப்­பூ­ரர்­கள் பலர் தங்­க­ளது குடும்­பத்­தி­லி­ருந்து தனியே சென்­ற­னர்.

இதற்­கி­டையே, வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து திரும்­பிய வீட்டு உரி­மை­யா­ளர்­கள் தங்­க­ளது வீடு­க­ளைத் திரும்­பப் பெற்­றுக்­கொண்­ட­தால் வாடகை வீடு­க­ளின் எண்­ணிக்­கை குறைந்­தது. வாட­கைக் கட்­ட­ணம் உயர அது­வும் ஒரு கார­ண­மாக அமைந்­து­விட்­டது.

"கொள்­ளை­நோ­யு­டன் வாழக்­

கூ­டிய நிலை­யில் பண­வீக்­கம் என்­பது தற்­போது பேசு­பொ­ரு­ளா­கி­

விட்­டது.

"தேவை அதி­க­மாக இருப்­ப­தால் $2,500 முதல் $4,000 வரை­யி­லான மாத வாட­கைக்­கு­ரிய வீடு­கள் அதிக நெருக்­கு­தலை எதிர்­நோக்கு கின்­றன.

"சில வீடு­க­ளின் வாடகை குறைந்­த­பட்­சம் 10 விழுக்­காட்­டி

­லி­ருந்து 15 விழுக்­காடு வரை ஏற்­கெ­னவே ஏறி­விட்­டது," என்­றார் 'சேவில்ஸ்' என்­னும் ஆய்வு நிறு­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் ஆலன் சியோங்.

இந்த ஆண்­டின் முதல் ஒன்­பது மாதங்­களில் தனி­யார் வீடு­க­ளின் வாடகை 7.1 விழுக்­காடு உயர்ந்­து­விட்­ட­தா­க­வும் காலி­யான வீடு­

க­ளின் எண்­ணிக்கை வீழ்ச்­சி­ய­டைந்­த­தும் இதற்கு ஒரு கார­ணம் என்­றும் சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

இந்த மாதத்­திற்­கான நிதி நிலைத்­தன்மை மறு­ஆய்வு அறிக்­கை­யில் அது இந்­தத் தக­வலை வெளி­யிட்­டுள்­ளது.

தற்­போ­து ஓரளவுக்குப் போது­மான அள­வுக்கு வாடகை வீடு­கள் இருந்­த­போ­தி­லும் காலி­யாக உள்ள வீடு­க­ளின் எண்­ணிக்கை குறைந்து வரு­வது இனி வரும் காலத்­தில் வாடகை ஏற்­றத்­திற்கு வழி­வ­குக்­கக்­கூ­டும் என்­றும் ஆணை­யம் கூறி­யுள்­ளது.

இந்­நி­லை­யில், இவ்­வாண்­டின் மூன்­றாம் காலாண்­டில் வாட­கைக் கட்­ட­ணங்­க­ளுக்­கான குறி­யீடு 111.3க்கு அதி­க­ரித்­தது.

2015ஆம் ஆண்­டின் முதல் காலாண்­டுக்­குப் பிறகு இந்த அள­வுக்கு இந்­தக் குறி­யீடு ஏற்­றம் கண்­டி­ருப்­பது இப்­போ­து­தான் என்று நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யத்­தின் புள்­ளி­வி­வ­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.